ஜுப்பல் பேலஸ் எனப்படும் இந்த அரண்மனை ஒரு ஃப்ரெஞ்சு கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்டதாகும். ராணாஸ் அபோட் என்றும் அழைக்கப்படும் இந்த மாளிகை சீன கட்டிடக்கலை அம்சங்களுடன் காட்சியளிக்கிறது. இந்த அரண்மனையின் அடிப்பகுதி மணற்பாறைகளால் கட்டப்பட்டிருப்பது ஒரு விசேஷமான அம்சமாக சொல்லப்படுகிறது.
இந்த அரண்மனையின் பெரும்பகுதி தேவதாரு மரப்பலகைகளால் அமைக்கப்பட்டுள்ள ஒரு வட்டவடிவ அமைப்பில் நிமாணிக்கப்பட்டிருக்கிறது. 18 அடி உயரமுள்ள ஒரு பிரம்மாண்ட மரக்கதவுடன் கூடிய வாயில் பகுதியை இது கொண்டுள்ளது.
பலவிதமான அரிய கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த அரண்மனையில் சம்ஸ்கிருத மற்றும் பெர்ஷிய நூல்களின் சேகரிப்பைக்கொண்ட ஒரு நூலகமும் உள்ளது.
இந்த அரண்மனையின் நவீன பகுதியானது இந்தோ-ஐரோப்பிய பாணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஜுப்பல் ராஜ வம்சத்தினர் போரில் பயன்படுத்திய பழங்கால பீரங்கிகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.



Click it and Unblock the Notifications