Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » காலாஹண்டி » வானிலை

காலாஹண்டி வானிலை

பருவக்காலத்தின் போது காலாஹண்டிக்கு சுற்றுலா வருவதே சரியான நேரமாக இருக்கும். இங்கு அதிக அளவில் மழை பெய்யாததால் இக்காலத்தில் நகரை சிரமமின்றி சுற்றிப் பார்க்கலாம். மேலும் பருவக்காலத்தின் போது நீர்வீழ்ச்சிகளில் அதிக அளவில் நீர் வரத்து இருக்கும். இங்கே உள்ள காடுகளும் கூட பச்சை பசுமையாய் காட்சியளிக்கும்.

கோடைகாலம்

காலாஹண்டியில் மார்ச் மாதம் தொடங்கும் கோடைக்காலம் ஜூன் வரை நீடிக்கும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை சராசரியாக 41° செல்சியசாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 45° செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 33° செல்சியசாகவும் நிலவும். தொடர்ச்சியாக வெயில் வெளுத்து வாங்குவதால் இக்காலத்தில் இங்கு வசிப்பது சிரமமாக இருக்கும்.

மழைக்காலம்

ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காலாஹண்டியில் பருவக்காலம் நீடிக்கும். இக்காலத்தில் சுமாராக மழை பெய்தாலும் வானிலை நன்றாகவே இருக்கும். இக்காலத்தில் இங்கு பயணம் செய்வது அழகிய அனுபவத்தை கொடுக்கும்.

குளிர்காலம்

காலாஹண்டியில் குளிர் காலம் குறைந்த காலத்திற்கே நீடிக்கும். டிசம்பர் மாதம் இங்கு ஆரம்பிக்கும் குளிர் காலம் பிப்ரவரியில் முடிவடையும். இக்காலத்தில் தட்ப வெப்பநிலை 5° செல்சியஸ் வரை செல்லும். ஜனவரி மாதத்தில் தான் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். இக்காலத்தில் இந்நகரமே பனிமூட்டத்தில் மூழ்கி விடும்.