கொடியா வனம் ஏராளமான நீரூற்றுகள் நிறைந்த ஒரு அமைதியான காட்டுப்பகுதியாகும். குரைக்கும் மான்கள், காட்டுப் பன்றிகள், இந்திய வகை மான்கள், மற்றும் கஸ்தூரி மான்கள் போன்றவை இக்காட்டில் வசிக்கின்றன.
இந்த இடம் பறவை கண்காணிப்பு, இயற்கை புகைப்படக்கலை மற்றும் உல்லாசப் பயணங்கள் ஆகியவற்றுக்கு சரியான தேர்வாக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் சுமார் 6 கி.மீ வரை இக்காட்டினுள் நடைப்பயணம் மேற்கொண்டு இதன் மேடு பள்ளங்கள் நிறைந்த மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ஆகியவற்றின் அழகைக் கண்டு ரசித்துத் திரும்பலாம்.
இது தவிர, ஜீப் மூலம் சென்றும் காட்டைச் சுற்றிப் பார்க்கலாம். சுற்றுலாப் பயணிகள், கையோடு மதிய சாப்பாட்டை எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Click it and Unblock the Notifications