ரம்மியமான வானிலையைக் கொண்டிருக்கும் கனாட்டல், விடுமுறைகளை இனிமையாய் கொண்டாட விரும்பும் சுற்றுலாப் பயணிகள் வருடந்தோறும் வந்து குவியும் ஒரு விடுமுறைக் கொண்டாட்ட ஸ்தலமாக உள்ளது. எனினும், மிக அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய மழைக்காலத்தில் இங்கு செல்வது உசிதமல்ல.
(ஏப்ரல் முதல் ஜூன் வரை): கனாட்டலில் கோடைகாலம் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பித்து ஜூன் வரை நீடிக்கும். இச்சமயத்தில் இங்கு நிலவக்கூடிய அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் தலா 25 டிகிரி செல்சியஸாகவும், 10 டிகிரி செல்சியஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் வெப்பநிலை குறைந்து காணப்படுமதனால், இக்காலத்தில் இங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மெல்லிய கம்பளித் துணிகளைக் கொண்டு செல்லலாம். கனாட்டலை சுற்றிப்பார்க்க ஏதுவானவை கோடைகாலங்களே ஆகும்.
(ஜூலை முதல் ஆகஸ்ட் வரை): ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் மழைக்காலத்தில், இப்பகுதி அதீத மழைப்பொழிவைப் பெறுகின்றது.
(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): இங்கு குளிர்காலம் அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை நீடிக்கின்றது. இச்சமயத்தில் இங்கு நிலவக்கூடிய அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் தலா 5 டிகிரி செல்சியஸாகவும், 18 டிகிரி செல்சியஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இங்கு பனிப்பொழிவு மிகவும் சகஜம். குளிர்காலத்தில் இங்கு பனிச்சறுக்கு போன்ற பல்வேறு சாகச விளையாட்டுக்களில் ஈடுபட்டு மனம் மகிழலாம்.