அக்டோபர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலகட்டம், இங்கு செல்வதற்கு ஏற்ற காலகட்டமாகும். கடும் மழைக்குப் பின், அக்டோபர் மாதத்தில் வசந்த காலம் ஆரம்பிக்கும். அப்போது, வானிலை பெரும்பாலும் குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் இருக்கும். குளிர் காலம் ஆரம்பிக்கும் நவம்பர் மாதத்தில், இரவுகள் மேலும் குளிர்ச்சியாக இருக்கும்; ஆனால் அதீதக் குளிர் இருக்காது. அதனால், அக்டோபர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலகட்டம், காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா செல்ல ஏற்ற காலமாகும்.
காஞ்சிபுரத்தில் கோடைகாலம், வீட்டை விட்டு வெளியே வரக் கூட முடியாத வகையில், மிகவும் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும். சுட்டெரிக்கும் சூரியனால் உங்களுக்கு, தலைவலி, உடல் நீர்க்குறை முதலியவை வரலாம். கோடைகாலம், மார்ச் மாதத்தின் நடுவில் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். கோடைகாலத்தில் தட்பவெப்ப நிலை, அதிக பட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை செல்லும்.
இக்காலகட்டத்தில், இங்கு மிதமானது முதல் கடுமையான மழை பெய்யும். அதனால், இந்த சமயத்தில், வானிலை மிதமான தட்பவெப்ப நிலையுடன் ரம்மியமாக இருப்பினும், சுற்றுலா சென்று, கண்டு களிக்க இயலாது. மே மாத முடிவில் ஆரம்பித்து செப்டம்பர் மாதத்தின் நடுப் பகுதி வரை மழைக்காலம் நீடிக்கும். மழைக்காலத்தின் போது, தட்பவெப்ப நிலை, அதிக பட்சமாக, 21–27 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
காஞ்சிபுரத்தில், குளிர்காலம் நவம்பர் மாத நடுவில் இருந்து பிப்ரவரி வரை நீடிக்கும். எனினும், காலை மற்றும் பகல் பொழுதுகள் ரம்மியமாகவே இருக்கும். இரவு நேரங்களில், கனமான ஸ்வெட்டர்கள் தேவைப்படும் அளவுக்கு குளிர் இருக்காது. ஒரு சால்வை அல்லது லேசான ஜாக்கெட் மட்டுமே போதுமானது. குளிர்காலத்தில் தட்ப வெப்ப நிலை 19 டிகிரிக்கு குறையாமலும், 21 டிகிரிக்கு மிகாமலும் இருக்கும்.