Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கஞ்சனூர் » வானிலை

கஞ்சனூர் வானிலை

அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை பயணிகளும், பக்தர்களும் கஞ்சனூருக்கு வருகை தரலாம். இக்காலகட்டத்தில் அக்னீஸ்வரர் கோவிலுக்கு வருகை தருவது களிப்பூட்டுவதாக அமைகின்றது. இந்த மாதங்கள் பொதுவாக ஈரப்பதம் நிறைந்ததாக இருக்கின்றன, ஆனாலும், சுற்றுலா பயணிகள் தாங்கள் பார்க்க இருக்கும் இடங்களை இன்புற பார்த்து மகிழக்கூடியதாக இருக்கின்றது.

கோடைகாலம்

கோடைக்காலம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை நீடிக்கின்றது. தட்பவெப்பம் 28 டிகிரி செல்சியஸ் முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது.

மழைக்காலம்

மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாத இறுதி வரை நீடிக்கின்றது. இவ்விடத்தில் மழைப்பொழிவு குறைவாகவே இருக்கிறது. ஆனாலும், மழைக்காலத்தில் அதிகமான தட்பவெப்பத்தில் இருந்து மக்கள் சற்று இளைப்பாறலாம்.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாத இறுதி வரை குளிர்காலம் நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் தட்பவெப்பம் 30 டிகிரி செல்சியசுக்கு குறைகின்றது. குறைந்தபட்ச தட்பவெப்பம் ஏறத்தாழ 20 டிகிரி செல்சியஸ் ஆகும்.