Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கண்ணூர் » வானிலை

கண்ணூர் வானிலை

கடுமையான மழைப்பொழிவு காணப்படும் மழைக்காலத்தையும், கடும் வெப்பம் நிலவும் கோடைக்காலத்தையும் தவிர்த்து மற்ற எல்லாக்காலமும் கண்ணூருக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. மழைக்காலம் முடிந்த பின் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து கோடைக்காலம் துவங்குவதற்கு முன்பான பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட காலம் இப்பகுதியில் சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக காணப்படுகிறது. இக்காலத்தில் பல உள்ளூர் கோயில் திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் நடைபெறுவது மட்டுமல்லாமல் கடற்கரைப்பகுதிகளை ரசிக்கவும் ஏற்றதாக உள்ளது.

கோடைகாலம்

கண்ணூர் நகரத்தில் கோடைக்காலமானது கடுமையான வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை கொண்டுள்ளது. மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மூன்று மாதங்கள் வரை நீடிக்கிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 38° C வரை வெப்பநிலை உயர்கிறது. எனவே இது கண்ணூரைச் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்ற பருவம் அல்ல.

மழைக்காலம்

கேரள மாநிலத்தின் மற்றப்பகுதிகளைப்போலவே கண்ணூர் பிரதேசமும் மழைக்காலத்தில் நல்ல மழைப்பொழிவை பெறுகிறது. கண்ணூர் பகுதியில் தென்மேற்குப்பருவ மழை ஜுன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கிறது. அக்டோபர் முதல் நவம்பர் வரை வடகிழக்கு பருவ மழையும் இங்கு பொழிகிறது. ஜுன் முதல் ஜூலை வரை கடும் மழைப்பொழிவு காணப்படுவதால் அக்காலத்தில் கண்ணூருக்கு சுற்றுலா மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

கண்ணூர் நகரத்துக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டு ஊர்சுற்றிப்பார்ப்பதற்கும் பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிப்பதற்கும் குளிர்காலமே உகந்ததாக உள்ளது. டிசம்பரில் துவங்கி பிப்ரவரியில் முடியும் குளிர்காலத்தின்போது இனிமையான இதமான சூழல் நிலவுகிறது. டிசம்பர் மாதமானது அதிகக் குளுமையுடன் 16° C வரை குறைந்து காணப்படுகிறது