Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கன்னியாகுமரி » வானிலை

கன்னியாகுமரி வானிலை

வருடத்தின் எல்லா காலக்கட்டத்திலும் நகரத்தின் வெப்ப நிலை இன்பம் தருவதாக இருப்பதால், வருடத்தில் எந்நேரமும் கன்னியாகுமரி வந்து மகிழலாம். இங்கே வெப்ப நிலையில் அதிக அளவு மாற்றம் இருக்காது. இருப்பினும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கன்னியாகுமரி பயணிக்க மிகவும் சிறந்த காலமாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

கன்னியாகுமரியில் கோடைக்காலம் மார்ச் மாதம் ஆரம்பித்து மே மாதம் முடிவடையும். இந்த காலகட்டத்தில் வானிலை இதமாக இருக்கும். வளிமண்டல வெப்ப அளவு 20 முதல் 35 டிகிரி செல்சியசாக இருக்கும். சுற்றுலாப் பயணிகள் கடல் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபட்டு மகிழலாம்.

மழைக்காலம்

மழைக்காலம் ஜூன் மாதம் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் இறுதி வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில், நகரத்தில் லேசான முதல் இடியுடன் கூடிய பலமான மழைகள் வரை பெய்யும். மழைக்காலங்களை விரும்புவோருக்கு  கன்னியாகுமரியில் சுற்றி மகிழ இதுவே உகுந்த காலம். இந்த காலத்தில் கன்னியாகுமரியே ஒரு அழகிய ஓவியம் போல் காட்சியளிக்கும் என்றால் அது மிகையாகாது.

குளிர்காலம்

குளிர் காலம் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும். குளுமையான வானிலையை இந்தக் காலங்களில் உணரலாம். வெப்ப நிலை 17 முதல் 32 டிகிரி செல்சியசாக இருக்கும். குளிர் காலங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கடல் சார்ந்த விளையாட்டுக்களில் ஈடுபட்டு, சுற்றுலாத் தலங்களுக்கு சென்று மகிழலாம்.