Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்ஜத் » வானிலை

கர்ஜத் வானிலை

வெப்பமான கோடைக்காலத்தையும் குளுமையான குளிர்காலத்தையும் கர்ஜத் சுற்றுலாத்தலம் கொண்டிருக்கிறது. இந்த சுற்றுலாத்தலத்தை இயற்கை ரசிகர்கள் ஜுன் முதல் அக்டோபர் வரையிலான இடைப்பட்ட காலத்தில் விஜயம் செய்வது சிறந்தது. மேலும், இக்காலத்தில்  சாகச விரும்பிகள் ஆற்று படகுச்சவாரி போன்றவற்றில் ஈடுபட்டு மகிழலாம்.

கோடைகாலம்

மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை கர்ஜத் பகுதியில் கோடைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 27° முதல் 39° வரை காணப்படுகிறது. குறிப்பாக  ஏப்ரல், மே மாதங்களில் உஷ்ணம் அதிகமாக இருக்கும். எனவே பயணிகள் இக்காலத்தை பொதுவாக தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

கர்ஜத் பகுதியில்  ஜுலை முதல் செப்டம்பர் வரை நிலவும் மழைக்காலத்தில்  ஆரோக்கியமான பருவநிலை நிலவுகிறது. மிதமான மழைப்பொழிவு இப்பிரதேசத்தை ஒரு சொர்க்கம் போல் மாற்றுகிறது. 

குளிர்காலம்

கர்ஜத் பகுதியில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இனிமையான குளிர்காலம் நிலவுகிறது. இக்குளிர்காலத்தில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக  11°C  ஆகவும் அதிகபட்சமாக 27°Cக்கு மிகாமலும் காணப்படுகிறது.