Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்னாலா » வானிலை

கர்னாலா வானிலை

வருடத்தின் எல்லா நாளிலும் இனிமையான பருவநிலையை கர்னாலா சுற்றுலாத்தலம் கொண்டிருக்கிறது. இயற்கை ரசிகர்கள் இந்த சுற்றுலாத்தலத்தை செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலத்தில் விஜயம் செய்வது சிறந்தது. அக்காலத்தில்  இங்குள்ள பறவைகள் சரணாலயத்தில் அதிக அளவிலான பறவை வகைகளை பார்த்து மகிழலாம்.

கோடைகாலம்

பொதுவாக கோடைக்காலத்தில் கர்னாலா பகுதி உஷ்ணத்துடன் 42°C வெப்பநிலை வரை காணப்படுகிறது.  கோடைக்காலம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நீடிக்கின்றது.

மழைக்காலம்

கர்னாலா பகுதி மத்திமமான மற்றும் மிதமான மழைப்பொழிவை மழைக்காலத்தில் பெறுகிறது. ஜுன் முதல் செப்டம்பர் வரை நிலவும் மழைக்காலத்தில் இங்கு சுற்றுலா மேற்கொள்வது பயணிகளால் தவிர்க்கப்படுகிறது.  இக்காலத்தில் மழையின் காரணமாக சுற்றுலா செயல்பாடுகள் யாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன.

குளிர்காலம்

கர்னாலா பகுதியில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இனிமையான குளிர்காலம் நிலவுகிறது. இக்குளிர்காலத்தில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாக  16°C  ஆகவும் அதிகபட்சமாக 32°C  வரையும் காணப்படுகிறது.