கோவாவிலுள்ள டபோலிம் விமான நிலையம் கார்வாருக்கு அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையம் ஆகும். இது ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய, மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான பல்வேறு சர்வதேச விமான சேவைகளை கொண்டுள்ளது. இங்கிருந்து கார்வாருக்கு வாடகைக்கு சிறு விமானங்களும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.