ஊர் சுற்றிப் பார்க்க ஏதுவாக மிதமான தட்பவெட்பநிலை நிலவும் கோடை காலமே கத்துவாவிற்கு பயணப்பட சிறப்பான காலமாகும்.
(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கும் கோடைகாலம் ஜூன் வரை நீள்கிறது. கோடைகாலத்தில் வெப்பம் சற்று அதிகமாகவும் சில நேரங்களில் மிதமாகவும் இருக்கிறது. இக்காலத்தில் 24 முதல் 47 டிகிரி வரை வெப்பம் இருக்கிறது. ஊர்சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த காலமாக கோடைகாலம் கருதப்படுகிறது.
(ஜூலை முதல் செப்டம்பர் வரை) : மழைக்காலம் ஜூலை மாதத்தில் ஆரம்பித்து செப்டம்பர் வரை நீடிக்கிறது. கத்துவாவில் பிரதான நகரில் மிதமான மழையளவே பதிவு செய்யப்பட்டாலும், கத்துவாவின் மலை சார்ந்த பகுதிகளில் மழையின் அளவு சற்று அதிகமாக இருக்கிறது.
(அக்டோபர் முதல் ஜனவரி வரை) : அக்டோபரில் ஆரம்பிக்கும் குளிர்காலம் ஜனவரி வரை நீள்கிறது. குளிர்காலத்தில் மிக அதிகமான குளிரும் பனியும் நிலவுகிறது. குறைந்தபட்சமாக 0டிகிரி வரையிலும் அதிகபட்சமாக 22டிகிரி வரையிலும் பதிவு செய்யப்படுகிறது. குளிர்காலத்தில் மிக மோசமான தட்பவெட்ப நிலை நிலவுவதால் சுற்றுப்பயணிகள் இந்த பருவத்தில் கத்துவா பயணப்படுவது உகந்ததல்ல.