கெஸ்ரோலி கிராமத்திலிருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா, பெங்களூர், மும்பை, சென்னை போன்ற நாட்டின் முக்கிய நகரங்களுக்கு எண்ணற்ற விமானங்கள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக கெஸ்ரோலி கிராமத்தை அடைந்து விடலாம்.