முகப்பு » சேரும் இடங்கள் » கம்மம் » ஈர்க்கும் இடங்கள்
 • 01பப்பிகொண்டலு மலைகள்

  பப்பிகொண்டலு மலைகள்

  ஆந்திராவிலுள்ள முக்கியமான சுற்றுலாஅம்சமாக கருதப்படும் பப்பி கொண்டலு எனப்படும் இந்த மலைத்தொடர் கம்மம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியின் பள்ளத்தாக்கு சமவெளிகளின் அழகு காஷ்மீர் பகுதியின் அழகுக்கு இணையாக புகழ் பெற்றுள்ளது.

  கம்மம் நகரத்திலிருந்து 124 கி.மீ தூரத்தில் இந்த மலைப்பகுதி காணப்படுகிறது. மேடக், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களின் அங்கமாகவும் இந்த மலைத்தொடர்கள் அமைந்துள்ளன.

  ஒரு காலத்தில் இந்த மலைத்தொடர் ‘பிரிப்பு’ எனும் பொருள் தரக்கூடிய பப்பிடி கொண்டலு என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. கோதாவரி ஆற்றை இரண்டாக பிரிக்கும்படியாக அமைந்திருப்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருந்தது.

  இருப்பினும் வேறு சிலரின் கருத்துப்படி, வானிலிருந்து பார்த்தால் ஒரு பெண்ணின் தலைமுடி இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டதுபோன்று இந்த மலைத்தொடர் காட்சியளிப்பதால் இந்த பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

  பப்பி கொண்டலு மலைகளில் அமைந்துள்ள முனிவாட்டம் எனும் ரம்மியமான நீர்வீழ்ச்சியும் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக பிரசித்தமாக அறியப்படுகிறது. ஆதிவாசிகள் வசிக்கும் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிப்பகுதியானது நிசப்தம் நிலவும் சூழல் மற்றும் கன்னிமை கெடாத இயற்கை எழிலுடன் ஜொலிக்கிறது.

  இங்கு வசிக்கும் ஆதிவாசிகள் அமைதியான குணம் உடையவர்களாகவும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்விதத்தில் இடைஞ்சல் தராதவர்களாகவும் விளங்குகின்றனர்.

  + மேலும் படிக்க
 • 02கம்மம் லட்சுமி நரசிம்மர் கோயில்

  கம்மம் லட்சுமி நரசிம்மர் கோயில்

  கம்மம் நகரத்திலிருந்து 46 கி.மீ தூரத்தில் இந்த லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. நகர எல்லைப்பகுதியிலேயே வீற்றுள்ள இக்கோயிலுக்கு சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம்.

  ஒரு மலையின் மீது கம்மம் நகரை நோக்கியவாறு இந்தக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கம்மம் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பிரதேசத்தில் இக்கோயில் முக்கியமான ஆன்மீக திருத்தலமாக பெயர் பெற்று விளங்குகிறது.

  தினமும் இந்த கோயிலில் வழிபடுவதற்காக ஏராளமான பக்தர்கள் பருவநிலை பாராமல் விஜயம் செய்கின்றனர். வருடத்தின் எல்லா நாட்களிலும் இந்த கோயில் திறந்துள்ளது.

  மஹாவிஷ்ணுவின் அவதாரமான நரசிம்மர் இந்த கோயிலில் வீற்றுள்ளார். சிங்கத்தின் தலையும் மனித உடலும் கொண்ட இந்த கடவுள் பக்தர்களின் காவல் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

  எனவே இக்கோயிலில் உள்ள கடவுளுக்கு பஞ்ச நரசிம்மமூர்த்தி என்ற பெயரும் வழங்கப்படுகிறது. கோயிலுக்கு வெளிப்பகுதியிலும் இக்கடவுளின் சிலை யோக கோலத்தில் அமர்ந்திருப்பதுபோல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

  கலையம்சம் மிளிரும் கோபுர அமைப்புகள், வித்தியாசமான கோயில் பிரகாரங்கள், கோயிலைச் சுற்றிலும் கண்ணைக்கவரும் இயற்கை எழில் என்று ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் இந்த கோயில் ஸ்தலம் ஆன்மீக அம்சங்களுக்கு அப்பாற்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அழகுச்சின்னமாகும். ரசனை மிக்க தென்னிந்திய சுற்றுலாப்பயணிகள் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய கோயில்களில் இதுவும் ஒன்று.

  + மேலும் படிக்க
 • 03ஜமாலபுரம் கோயில்

  ஜமாலபுரம் கோயில்

  கம்மம் நகரத்திலிருந்து 124 கி.மீ தூரத்தில் இந்த ஜமாலபுரம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு கம்மம் சின்ன திருப்பதி கோயில் என்ற சிறப்புப்பெயரும் உண்டு.

  பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்த கோயிலை கட்டிய பெருமை விஜயநகர பேரரசரான கிருஷ்ண தேவராயருக்கு உரியதாகிறது. வெங்கடேஸ்வர கடவுளுக்காகவே இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

  1000 வருடங்கள் பழமையான கோயில் என்பதால் இது யாத்ரீகர்கள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது. விஷ்ணு பக்தர்கள் மிக விரும்பும் ஆலயங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

  விசேஷ பூஜை நடத்தப்படும் சனிக்கிழமைகளில் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர். இக்கோயிலில் வேண்டிக்கொண்டதெல்லாம் நிறைவேறும் என்பதாக பக்தர்கள் மத்தியில் ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

  இந்த கோயிலுக்கு மிக அருகிலேயே சூசிகுட்டா எனும் மலை அமைந்துள்ளது. இது ஜபாலி முனிவருடன் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது. இந்த மலையில் கடுந்தவத்தில் இந்த ஜபாலி முனிவர் ஈடுபட்டதாகவும் இறுதியில் இவரது தவத்தை மெச்சி வெங்கடேஸ்வரர் தரிசனமளித்து வரங்கள் அருளியதாகவும் புராணிகக்கதை கூறுகிறது.

  + மேலும் படிக்க
 • 04பாலாயிர் ஏரி

  பாலாயிர் ஏரி

  ஆந்திர மாநிலத்தில் கம்மம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பாலாயிர் ஏரி இந்தியாவிலுள்ள அழகான ஏரிகளுள் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. கம்மம் மாவட்டத்தில் குசுமஞ்சி தாலுக்காவில் (மண்டல்) உள்ள பாலாயிர் எனும் கிராமத்தின் ஒரு பகுதியாக இந்த ஏரி வீற்றுள்ளது.

  கம்மம் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஏரியை சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். மனித முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை ஏரி நாகார்ஜுனசாகர் அணைத்திட்டத்தின் ஒரு அங்கமாகவும் செயல்படுகிறது. லால் பகதூர் கால்வாய் என்று அழைக்கப்படும் ஒரு கால்வாய் மூலமாக இணைக்கப்பட்டு ஒரு உபரி நீர்த்தேக்கமாக இந்த ஏரி பயன்படுத்தப்படுகிறது.

  1748 ஹெக்டேர் பரப்பளவில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த ஏரி 2.5 டி.எம்.சி நீரை சேமிக்கக்கூடிய கொள்ளளவை கொண்டுள்ளது. நீர்ப்பாசனத்துக்கான ஆதாரமாக பயன்படுவது மட்டுமல்லாமல் மீன் வளர்ப்புக்கும் இந்த ஏரி பயன்பட்டு வருகிறது.

  பலவித நீர்விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருப்பதால் இந்த பாலாயிர் ஏரி கம்மம் நகரத்தின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.

  நன்னீர் மீன்கள் மற்றும் இறால் போன்றவை இந்த ஏரியில் கிடைக்கின்றன. இந்த ஸ்தலத்திலேயே இவை உணவாக தயாரிக்கப்பட்டு பயணிகளுக்கு வழங்கப்படும் வசதியும் இங்குள்ளது.

  பாலாயிர் ஏரிக்கு வெகு அருகிலேயே வய்ரா ஏரி என்ற மற்றொரு பிரசித்தமான பிக்னிக் ஸ்தலமும் அமைந்துள்ளது. கம்மம் நகருக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இந்த ஏரிப்பகுதிகளுக்கு ஓய்வாக விஜயம் செய்து இந்த சூழலின் இயற்கை அழகை ரசித்து மகிழலாம்.

  + மேலும் படிக்க
 • 05கம்மம் கோட்டை

  கம்மம் கோட்டையானது, 950 ம் ஆண்டுகளில் இப்பகுதி காகதீய வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தபோது கட்டப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர்களது ஆட்சியில் இதன் கட்டுமானம் முடிக்கப்படவில்லை.

  அவர்களுக்கு அடுத்து, முசுனுரி நாயக்கர்கள் மற்றும் வேலமா வம்ச மன்னர்கள் இந்த கோட்டைக் கட்டுமானத்தை முடித்துள்ளனர். மேலும், பின்னாளில் 1531ம் ஆண்டில் குதுப் ஷாஹி வம்சத்தினர் இந்த கோட்டை வளாகத்தில் கூடுதலாக புதிய மாளிகைகளையும் இணைப்புகளையும் நிர்மாணித்துள்ளனர்.

  ஹிந்து மற்றும் இஸ்லாமிய பாணி இரண்டும் கலந்த கட்டிடக்கலை அம்சங்களை இந்த கோட்டை அமைப்பில் பார்க்க முடிகிறது. இரண்டு மரபுகளையும் சேர்ந்த மன்னர்களின் ஆட்சியில் இந்த கோட்டையின் கட்டுமானம் உருவாக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம். 1000 வருடங்கள் கழிந்தபின்னரும் தன்னுடைய புராதன பொலிவு குன்றாமல் இந்த கோட்டை கம்பீரமாக வீற்றிருக்கிறது.

  கம்மம் பகுதியின் வரலாற்று பின்னணியோடு தொடர்புடைய இந்த கோட்டை ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக கம்மம் நகரம் மற்றும் ஒட்டுமொத்த ஆந்திரம் மாநிலத்தையும் பெருமைப்படுத்தும் விதத்தில் வீற்றுள்ளது. இந்த கோட்டை ஸ்தலத்தை ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக பராமரிப்பதற்காக ஆந்திர மாநில அரசாங்கமும் அதிக நிதியை செலவிட்டுள்ளது.

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Feb,Wed
Return On
22 Feb,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
21 Feb,Wed
Check Out
22 Feb,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
21 Feb,Wed
Return On
22 Feb,Thu

Near by City