கந்த்வாவின் அழகை ரசிக்க ஏற்ற காலம் குளிர்காலம். மேலும், இந்த சமயத்தில் துர்கா பூஜா தொடங்கி சிவராத்திரி வரை பல்வேறு திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது. சுற்றுலா சீசன் என்பதால், முன்பதிவு செய்து பயணத்தைத் திட்டமிடுதல் அவசியம்.
மார்ச் முதல் மே மாதம் வரை உள்ள வெயில் காலத்தில், கந்த்வா நகரில் வெப்பம் அதிகமாகக் கணப்படும், 42 டிகிரி வரை வெப்பம் இருக்கும் இக்காலத்தில் கந்த்வா நகருக்கு சுற்றுலாச் செல்வதை தவிர்த்தல் நலம்.
கந்த்வாவில் மழைக்காலம் ஜூன் மாதம் தொடங்குகிறது. மழை அதிகமாக பொழியும் இடம் கந்த்வா. எந்நேரமும் மழை பொழிந்து, நம் பயணத் திட்டங்களைச் சீர்குலைக்கும். ஆதலாம், இந்த சமயத்திலும், கந்த்வாவிற்கு சுற்றுலாச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கந்த்வாவில் குளிர்காலம். ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் குளிர் மிக அதிகமாக இருக்கும். பொதுவாக, குளிர்காலத்தில் 10 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். இந்த சமயத்தில் கந்த்வாவிற்கு பயணம் செய்தல் சிறப்பானது. குளிருக்கு ஏற்றார் போல உடைகளை எடுத்துச் செல்வது நலம்.