1872-ஆம் ஆண்டு இந்த இடத்தை கண்டுப்பிடித்த லெப்டினென்டு கோக்கரின் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் தொலைவில் கொடைக்கானலின் தெற்குச் சரிவில் அமைந்துள்ளது.
இயற்கை விரும்பிகள் கண்டிப்பாக காண வேண்டிய இடம் இது. இந்த இடம் மிக நீளமான வளைந்த பாதைகளோடு ஆங்காங்கே அழகிய மரங்கள் மற்றும் பூக்களுடன் காட்சி அளிக்கும்.
இங்கே உள்ள ஒரு தொலைநோக்கியின் மூலம் பள்ளத்தாக்கின் அழகையும் மலைக்கு இறக்கத்தில் அமைந்துள்ள நகரங்களையும் கண்டு களிக்கலாம். கோக்கர்ஸ் வாக் நுழைய நுழைவுச் சீட்டு பெற வேண்டும்.
இங்கே நடை கொள்ள மதியம் 2.30 மணிக்குள் செல்ல வேண்டும். இல்லையென்றால் பனி கீழே இறங்க ஆரம்பித்து விடும். இயற்கையை ரசித்து கொண்டே நடைக்கொள்ள இது மிகவும் ரம்மியமான இடம்.



Click it and Unblock the Notifications