Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொடுங்கல்லூர் » வானிலை

கொடுங்கல்லூர் வானிலை

கதம்பமான பருவநிலையை கொண்டிருப்பதால் மழைக்காலம் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் கொடுங்கல்லூருக்கு பயணம் மேற்கொள்ளலாம். குறிப்பாக டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட பருவம் சுற்றுலாவுக்கு உகந்ததாக உள்ளது. திருவிழாக்கொண்டாட்டங்களை பார்த்து ரசிக்க விரும்பும் ரசிகர்கள் மற்றும் பக்தர்கள் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான இடைப்பட்ட பருவத்தில் இங்கு விஜயம் செய்யலாம்.

கோடைகாலம்

கொடுங்கல்லூர் பகுதியில் மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதத்தில் முடிவடைகிறது. வறண்ட சூழல் நிலவும் இக்காலத்தில் அதிகபட்சமாக 39° C வரை வெப்பநிலை உயர்கிறது. கோயில்களை சுற்றிப்பார்க்க இது ஏற்ற காலமாக கருதப்படுகிறது. இருப்பினும் பயணிகள் மெலிய பருத்தி உடைகளுடன் செல்வது சிறந்தது.

மழைக்காலம்

ஜூன் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாத இறுதி வரை நீடிக்கும் மழைக்காலத்தில் கொடுங்கல்லூர் பகுதியானது கடுமையான ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. நான்கு முழு மாதங்களுக்கு நீடிக்கும் மழைக்காலத்தில் நல்ல மழைப்பொழிவையும் கொடுங்கல்லூர் பெறுகிறது. குறிப்பாக ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் அதிக மழைப்பொழிவு இருப்பதால் பயண நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன. எனவே இம்மாதங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் இனிமையான மற்றும் மிதமான பருவநிலையுடன் கொடுங்கல்லூர் காட்சியளிக்கிறது. டிசம்பரில் துவங்கி பிப்ரவரி வரை குளிர்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் 22° C முதல் 32° C வரை வெப்பநிலை நிலவுகிறது. கொடுங்கல்லூர் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள இதுவே உகந்த பருவமாக உள்ளது.