கோலார் பிரதேசத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய மற்றொரு ஸ்தலம் இந்த கோடி லிங்கேஸ்வரர் ஆலயமாகும். இது கம்மசந்திரா கிராமத்தில் அமைந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிதான 108 அடி உயர சிவலிங்கம் இங்கு ஸ்வாமி சாம்ப சிவ மூர்த்தியால் உருவாக்கப்பட்டுள்ளது. அது தவிர 35 அடி உயர ந ந்தி சிலையும் இங்கு மூல விக்கிரக்கின் முன் அமைக்கப்பட்டுள்ளது.நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் மஹா சிவராத்திரியின் போது இந்த கோடி லிங்கேஸ்வர கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
இங்கு விஷ்ணு பஹவான், ராமபிரான், மஹேஸ்வரர், ஆஞ்சநேயர், அன்னபூரணீஸ்வரி, பிரம்மா போன்ற மற்ற முக்கியமான இந்து கடவுள்களின் சிலைகளும் உள்ளன.
மேலும் கன்னிகா பரமேஸ்வரி, வெங்கடரமணி ஸ்வாமி, கருமாரி அம்மன், பாண்டுரங்க ஸ்வாமி போன்ற கடவுள்களுக்கு சிறு கோயில்களும் உள்ளன.இங்கு வரும் பக்தர்கள் இந்த கோயிலின் தெய்வத்துக்கு சிறு லிங்கங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்த லிங்கங்கள் இங்குள்ள கோயில் ஸ்தலத்திலேயே விற்பனை செய்யப்படுகின்றன. 10 அர்ச்சர்கர்கள் மூலம் இங்கு தினமும் காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை பூஜைகள் செய்யப்படுகின்றன.
இந்த அர்ச்சகர்கள் கோயிலில் உள்ள எல்லா லிங்கங்களுக்கும் இசைக்கருவிகளின் முழக்கத்துடன் மந்திரங்களை ஜெபித்தபடி அபிஷேக ஆராதனைகளை செய்கின்றனர்.



Click it and Unblock the Notifications