Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொல்லம் » வானிலை

கொல்லம் வானிலை

நவம்பர் முதல் மார்ச் வரையிலான பருவமே கொல்லம் நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இக்காலத்தில் பலவித பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்படுவதால் உள்ளூர் கலாச்சாரம் மற்றும் விசேஷங்களை தரிசிப்பது பயணிகளுக்கு எளிமையாக இருக்கும். கடுமையான வெப்பம் நிலவும் ஏப்ரல், மே மாதங்கள், இடைவிடாத மழைப்பொழிவை கொண்டுள்ள ஜுன், ஜூலை மாதங்கள் ஆகியவை தவிர்க்க வேண்டிய பருவங்களாகும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை): கொல்லம் பகுதி அரபிக்கடலுக்கு அருகில் உள்ளதால் வறட்சியான கோடைக்காலத்தைப் பெற்றுள்ளது. மார்ச் முதல் மே மாத பிற்பகுதி வரை நீடிக்கும் கோடைக்காலத்தில் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது. இக்காலத்தில் அதிகபட்சமாக 35° C வரை வெப்பநிலை காணப்படுகிறது. கோடைக்காலத்தில் கொல்லம் நகருக்கு சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் லேசான பருத்தி உடைகள் மற்றும் கண்ணுக்கு குளிர் கண்ணாடிகள் ஆகியவற்றோடு செல்வது சிறந்தது.

மழைக்காலம்

(ஜுன் முதல் செப்டம்பர் பாதி வரை): கொல்லம் பகுதியில் ஜுன் மாதத்தில் துவங்கும் தென்மேற்கு பருவமழைக்காலத்தின் காரணமாக ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நல்ல மழைப்பொழிவு காணப்படுகிறது. இது செப்டம்பர் பாதி வரை நீடிக்கிறது. இது தவிர அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் வடகிழக்கு பருவமழையின் முலம் கணிசமான மழைப்பொழிவை கொல்லம் பகுதி பெறுகிறது. படகுப்பயணம், கடற்கரைச் சுற்றுலா போன்றவற்றுக்கு இந்த மழைக்காலம் சௌகரியமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): கொல்லம் பகுதியில் டிசம்பர் மாதத்திலிருந்து ஆரம்பிக்கும் குளிர்காலத்தில் சூழலானது உலர்ந்த தன்மையுடன் காட்சியளிக்கிறது. அவ்வப்போதைய மழைப்பொழிவையும் கொல்லம் பகுதி குளிர்காலத்தில் பெறுகிறது. டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் படகுவீடு சுற்றுலா, ஊர்சுற்றிப்பார்த்தல் போன்ற பல வெளிப்பயணங்களுக்கு உகந்தவையாகும்.