ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஓணம் திருவிழா நடைபெறுவதால் கேரள மாநிலமே விழாக் கோலம் பூண்டிருக்கும். எனவே பயணிகள் இந்தக் காலங்களில் கொட்டாரக்கரா நகருக்கு சுற்றுலா வருவது சிறப்பானதாக இருக்கும். இதுபோக செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களிலும் கொட்டாரக்கரா நகருக்கு சுற்றுலா வரலாம்.
(மார்ச் முதல் மே வரை) : கொட்டாரக்கரா நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 35 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகும். அதிலும் குறிப்பாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வானிலை மிகவும் சூடாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் இருக்கும்.
(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : கொட்டாரக்கரா நகரின் மழைக் காலங்களில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக கடும் மழைப் பொழிவு இருக்கும்.
(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : கொட்டாரக்கரா நகரின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 20 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் நிலவும் இதமான வெப்பநிலை காரணமாக கொட்டாரக்கரா நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.