கும்டாவுக்கு பனிக் காலங்களில் சுற்றுலா வருவது சிறப்பானதாக இருக்கும்.
(ஏப்ரல் முதல் ஜூலை வரை): கும்டா பகுதி கோடைக்காலத்தில் அதிக உஷ்ணத்துடனும் ஈரப்பதத்துடனும் காணப்படுகிறது. இக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை பகலில் 35° C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக இரவில் 28° C ஆகவும் உள்ளது. அதிக உஷ்ணம் மற்றும் ஈரப்பதமான பருவநிலை காரணமாக பெரும்பாலும் பயணிகள் கோடைக்காலத்தில் இங்கு வருவதை தவிர்க்கின்றனர்.
(ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை): குளிர்காலத்தில் குறிப்பிடும்படியான மழைப்பொழிவை கும்டா பகுதி பெறுகிறது. மழைக்கால இறுதியில் இங்கு குளிர் அதிகமாகவே காணப்படுகிறது.
(நவம்பர் முதல் மார்ச் வரை): குளிர்காலத்தில் கும்டா பகுதியின் சிதோஷ்ண நிலை மிகக்குளிர்ச்சியுடனும் இனிமையான சூழலுடனும் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை 19° C முதல் 26° C வரை மட்டுமே உள்ளது. இனிமையான சூழல் காரணமாக குளிர்காலம் அதிக அளவில் பயணிகளை கும்டாவுக்கு ஈர்க்கும் வகையில் உள்ளது.