Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாதூர் » வானிலை

லாதூர் வானிலை

கோடைகாலம்

கோடைக்காலத்தில் லாதூர் பகுதியில் அதிக உஷ்ணமும் வறட்சியும் நிலவுகிறது. இருப்பினும் மாலை நேரத்தில் இனிமையான சூழல் காணப்படுவதால் வெளிச்சுற்றுலாவில் ஈடுபடலாம்.  இக்காலத்தில் சராசரி வெப்பநிலையாக  குறந்தபட்சம் 24°C  முதல் அதிகபட்சம் 39°C  வரை நிலவுகிறது.

மழைக்காலம்

லாதூர் பகுதியில் ஜுலை தொடங்கி மழைப்பொழிவு நிலவுகிறது. இக்காலத்தில் ரம்மியமான இயற்கை எழிலுடன் இப்பகுதி காட்சியளிக்கிறது. வருடாந்திரமாக 600 – 800 மி.மீ மழைப்பொழிவை இப்பகுதி  பெறுகிறது. மாலை நேரத்தில் 16°C  வரை வெப்பநிலை குறைந்து காணப்படும்.

குளிர்காலம்

பெரும்பாலான பயணிகள் குளிர்காலத்தில் லாதூர் நகரத்திற்கு விஜயம் செய்வதை விரும்புகின்றனர். இருப்பினும் கடலை விட்டு விலகி இருக்கும் இப்பகுதியில் அதிகக்குளிரும் நிலவுகிறது. குகைகள் மற்றும் கோட்டைகள் போன்றவை பகலிலும் குளுமையுடன் காணப்படும். இக்காலத்தில் 10°C  வரை வெப்பநிலை குறையக்கூடும்.