லே விமான நிலையத்திற்கு, ஜம்மு, தில்லி, மற்றும் ஸ்ரீநகர் உள்ளிட்ட நாட்டின் பிற நகரங்களிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. சர்வதேச பயணிகள், டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூலம் லேவை அடையலாம். சுற்றுலா பயணிகள் வசதிக்காக, லே விமான நிலையத்தில், வாடகை டாக்சிகள் உள்ளன.