லொனாரின் கோடை காலமான மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலங்கள் மிகவும் சூடானதும், வரட்சியானதும் ஆகும். இந்த காலங்களில் லொனாரின் வெப்பநிலை அதிகபட்சம் 38 டிகிரியும், குறைந்தபட்சம் 25 டிகிரியுமாக இருக்கும்.
லொனாரின் மழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலங்களில் மிதமான மழையே பதிவாகும். அதனால் அந்த காலங்களில் நீங்கள் லொனார் சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும்.
லொனாரின் குளிர் காலமான நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலங்களில் அதிகபட்சம் 28-ம், குறைந்தபட்சம் 12 டிகிரியும் வெப்பம் நிலவும். லொனாரை சுற்றிப் பார்க்க சிறந்த காலம் அதன் குளிர் காலம்தான். எனினும் இந்த காலங்களில் லொனார் வரும் சுற்றுலாப் பயணிகள் கம்பளி ஆடைகளை அணிந்துகொள்வது முக்கியமானது.