மஹாசமுந்த் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள பாம்பினி எனும் கிராமத்தில் இந்த ஸ்வேத் கங்கா அமைந்திருக்கிறது. இது வற்றாத நீரூற்றாகும். ஒரு குழி போன்று காணப்படும் இந்த ஊற்றிலிருந்து இடைவிடாத சுரக்கும் நீர் ஆற்றில் சென்று கலக்கிறது.
இந்த நீரூற்று ஸ்தலத்துக்கு அருகில் ஒரு புராதனமான சிவன் கோயிலும் அமைந்திருக்கிறது. இது மிகப்பழமையான கோயிலாக கருதப்படுகிறது.
சிரவண மாதத்தின்போது இந்த ஸ்தலத்தில் திருவிழா ஒன்று விமரிசையாக நடத்தப்படுகிறது. அச்சமயம் பக்தர்கள் நீருற்றிலிருந்து நீரை எடுத்துச்சென்று கண்டேஷ்வர் மஹாதேவ் எனப்படும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இந்த சடங்கு நிகழ்ச்சியை செய்விக்கும் பக்தர்கள் கன்வாரியா என்று அழைக்கப்படுகின்றனர்.



Click it and Unblock the Notifications