Search
  • Follow NativePlanet
Share

மஹாசமுந்த் –  சிவன் கோயில்கள் வீற்றிருக்கும் ஆன்மீகபூமி!

9

சோமவன்ஷிய மஹாமன்னர்களால் ஒரு காலத்தில் உன்னதமாக ஆளப்பட்ட இந்த மஹாசமுந்த் மாவட்டம் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தை வாய்க்கப்பெற்றுள்ளது. சத்திஸ்ஹர் மாநிலத்தின் மத்திய கிழக்கு பகுதியை உள்ளடக்கியதாக இந்த மஹாசமுந்த் மாவட்டம் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சிர்பூர் ஒரு ஒரு முக்கியமான புராதன வரலாற்று சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. மஹாநதியின் கரைப்பகுதியில் இந்த சிர்பூர் நகரம் அமைந்திருக்கிறது. சுண்ணாம்புப்பாறைகள் மற்றும் கிரானைட் எனப்படும் பளிங்குப்பாறைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.

மஹாசமுந்த் கலாச்சாரம்!

மஹாசமுந்த் மாவட்டத்தில்  ஹல்பா, முண்டா, சோனார், சன்வாரா, பர்தி, பஹாலியா போன்ற பழங்குடி இனத்தவர்கள் வசிக்கின்றனர். பழங்குடி கலாச்சாரம், பழங்குடி திருவிழாக்கள்,  பழங்குடி சந்தைகள் என்று இந்த பிரதேசத்தின் வாழ்க்கை முறை  முழுக்க முழுக்க பழங்குடி இனத்தாரின் அடையாளங்களுடன் ஒளிர்கிறது.

தனித்தன்மையான உடை அலங்காரத்தை இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பின்பற்றுகின்றனர். ஆண்கள் வேட்டி,குர்தா, தலைப்பாகை மற்றும் பண்டாய் எனப்படும் தோல் காலணியுடனும்,  பெண்கள் புடவை உடுத்தும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர்.

பிச்சியா, கர்தான் எனும் இடுப்பு பட்டி, பர்பட்டி எனும் வளையல்கள், ஃபுலீ எனும் வெள்ளி காது வளையங்கள் போன்ற ஆபரணங்களை இப்பகுதி பெண்கள் அணிகின்றனர். திருவிழாக்களை கோலாகலமாக கொண்டாடி மகிழ்வதில் இவர்கள் அதிகம் விருப்பம் கொண்டுள்ளனர்.

மஹாசமுந்த் மற்றும் அருகிலுள்ள சுற்றுலா அம்சங்கள்

மஹாசமுந்த் நகரம் மற்றும் மாவட்டத்தில் லக்ஷ்மணா கோயில், ஆனந்த் பிரபு குடி விஹார், பாம்பினி ஸ்வேத் கங்கா, கல்லாரிமாதா கோயில், கௌதாரா(தல்டலி), சண்டி கோயில் (பிர்கோனி), சண்டி கோயில் (குச்சபாலி), ஸ்வஸ்திக் விஹார், கந்தேஷ்வர் கோயில் ஆகியவை பார்க்க வேண்டிய விசேஷ அம்சங்களாக அமைந்திருக்கின்றன.

எப்படி செல்வது?

மஹாசமுந்த் நகரம் மற்றும் மாவட்டம் சாலைப்போக்குவரத்து வசதி மற்றும் ரயில் சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தலைநகரான ராய்பூரில்  விமான நிலையமும் உள்ளது.

மஹாசமுந்த் சிறப்பு

மஹாசமுந்த் வானிலை

சிறந்த காலநிலை மஹாசமுந்த்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மஹாசமுந்த்

  • சாலை வழியாக
    There is no route available in மஹாசமுந்த்
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    ராய்பூர் ரயில் நிலையம் மஹாசமுந்த் நகரத்துக்கு அருகில் உள்ளது. உள்ளது. இது மும்பை-ஹௌரா பிரதான ரயில் பாதையில் அமைந்திருக்கிறது
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    ராய்பூர் விமான நிலையம் மஹாசமுந்த் நகரத்துக்கு அருகில் உள்ளது. இங்கிருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா, ராஞ்சி, வைசாக் மற்றும் சென்னைக்கு விமான சேவைகள் உள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed