ஜொர்ஹாத் நகர விமான நிலையம் மாஜூலி தீவிற்கு அருகில் உள்ள விமான நிலையமாகும். அஸ்ஸாம் மாநிலத்திலேயே நான்காவது முக்கிய விமான நிலையமாக இது செயல்படுகிறது. இங்கிருந்து கவுஹாத்தி, டெல்லி மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்திலிருந்து நிமாடி காட் படகுத்துறையை அடைந்து அங்கிருந்து ஃபெர்ரி மூலம் பயணிகள் மாஜூலி தீவிற்கு வந்து சேரலாம்.