Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மலம்புழா » வானிலை

மலம்புழா வானிலை

மலம்புழாவின் கோடை காலங்களில் கடுமையான வெப்பம் நிலவுமாதலால், பயணிகள் இந்த காலங்களில் மலம்புழா சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது. ஆனால் இதமான வெப்பநிலையை கொண்டிருக்கும் பனிக் காலங்களில் மலம்புழா நகரை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். மேலும் பாலக்காடு மாவட்டம் திருவிழாக்களுக்கு பெயர் போன காரணத்தால், கல்பாத்தி ரத்தோல்சவம் (தேர்த்திருவிழா) , காளப்பூட்டு (காளை பந்தயம்) போன்ற திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் நீங்கள் மலம்புழா நகருக்கு சுற்றுலா வருவது உங்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : மலம்புழா நகரின் கோடை காலங்களில் வெப்பநிலை சிலசமயம் 45 டிகிரியை கூட தாண்டி விடும். எனவே பயணிகள் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் மலம்புழா நகருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : மலம்புழா நகரின் மழைக் களங்களில் நல்ல மழைப் பொழிவு இருக்கும். அதோடு இடைவிடாத மழைப் பொழிவால் மலம்புழா கார்டன் மற்றும் அணை போன்ற இடங்களை சுற்றிப் பார்ப்பது கடினமாக காரியமாக ஆகிவிடும். அதனால் பயணிகள் மழைக் காலங்களில் மலம்புழா நகருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : மலம்புழா நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 32 டிகிரியும், குறைந்தபட்சமாக 20 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.