Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மலயாட்டூர் » வானிலை

மலயாட்டூர் வானிலை

மலயாட்டூர் மலைப்பிரதேசத்தை அக்டோபரிலிருந்து, பிப்ரவரி வரையிலான காணல்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். எனினும் மலயாட்டூர் பெருநாள் திருவிழாவை காண விரும்பும் பயணிகள் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மலயாட்டூர் வருவதுதான் சிறந்தது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : மலயாட்டூரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 38 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகும். அதோடு இந்த பருவத்தில் மலயாட்டூரில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுவதால் பயணிகள் கோடை காலங்களில் மலயாட்டூருக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : மலயாட்டூரில் வடமேற்கு பருவக்காற்றின் காரணமாக அக்டோபர் மாதத்தில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும். அதோடு பொதுவாகவே மலயாட்டூரின் மழைக் காலங்களில் அதிக அளவில் மழைப் பதிவாகும். எனவே பயணிகள் மழைக் காலங்களில் மலயாட்டூர் வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : மலயாட்டூரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 30 டிகிரியும், குறைந்தபட்சமாக 22 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.