Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டு » ஈர்க்கும் இடங்கள் » ஜஹாஸ் மஹால்

ஜஹாஸ் மஹால், மண்டு

49

மண்டுவில் மிகவும் அழகான, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஜஹாஸ் மஹால் ஆகும். கபூர் தலாவோ மற்றும் மன்ச் தலாவோ ஆகிய இரண்டு ஏரிகளுக்கு நடுவில், கப்பல் வருவதை பார்க்கும் வகையில் அமைந்துள்ளதால் 'கப்பல் அரண்மனை' என்ற பெயரை இந்த அரண்மனை பெற்றுள்ளது.

கில்ஜி வம்சத்தைச் சோந்த கியாஸ்-உத்-தீன் கில்ஜியால் கட்டப்பட்ட இந்த அரண்மனை, காதல் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் சுல்தான்களின் அந்தப்புரமாக இருந்து வந்தது.

எண்ணற்ற நீரூற்றுகளால், கால்வாய்களில் அமைதியாக தண்ணீர் பாய்ந்து கொண்டு இருக்கும் இந்த அந்தப்புரத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் இருப்பதால் இங்கே சுல்தாளை பார்ப்பது ஒன்றும் அதிசயமான விஷயமில்லை.

இரண்டு அடுக்குகள், எண்ணற்ற தூண்கள், வளைவுகள் மற்றும் டைல்ஸ்கள் பதிக்கப் பட்டுள்ள வளைவுகள் ஆகியவற்றால் உருவான அற்புத கட்டிடக்கலையுடன் இருக்கும் இந்த அரண்மனைக்கு வருவது சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும்.

இந்த அரண்மனையில் இருந்தபடி புகைப்படம் எடுத்துக் கொள்வது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் விருப்பமான பொழுதுபோக்காகும். ஏரிகளின் சுற்று வட்டக் காட்சிகள், சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள தோட்டங்கள் மற்றும் அவற்றின் பசுமை ஆகியவை காண்பவர்களை வியக்க வைக்கும் காட்சிகளாகும்.

மேலும், இயற்கையை, அழகை இரசிக்காதவர்களையும் கூட மீண்டும் ஒருமுறை பின்னால் வரச் செய்து, அவர்கள் வாயாலேயே புகழ்ந்திடச் செய்யும் அழகை பெற்றுள்ள இடமாக ஜஹாஸ் மஹால் உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 May,Tue
Return On
13 May,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 May,Tue
Check Out
13 May,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 May,Tue
Return On
13 May,Wed

Near by City