Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மான்சா » வானிலை

மான்சா வானிலை

அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட பருவமே மன்சா சுற்றுலாவிற்கு உகந்த பருவம் ஆகும். இந்த மாதங்களில் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு திருவிழாக்கலான தீபாவளி மற்றும் தசரா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. 

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை): இங்கு கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 45 டிகிரி செல்ஸியஸ் வரை செல்கின்றது. மேலும் இங்கு கோடைகாலத்தில் வானிலை மிகவும் வறண்டு காணப்படுகின்றது.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை): பருவமழை இந்த நகரத்தின் இனிமையான வானிலையின் தொடக்கத்தை குறிக்கின்றது. இந்தப் பருவத்தில் வெப்பநிலை குறைந்து காணப்பட்டாலும், ஈரப்பதம் மிகுந்து காணப்படுகின்றது. பருவமழைக் காலத்தை தொடர்ந்து பின் பருவமழைக் காலம் (அக்டோபர் முதல் நவம்பர் வரை) தொடங்குகின்றது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை): மான்சாவில்  குளிர்காலம் மிகுந்த குளிருடன் காணப்படுகின்றது. குளிர்காலத்தில் இந்த நகரத்தின் அதிகபட்ச மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை முறையே 20 டிகிரி செல்ஸியஸ் மற்றும் 5 டிகிரி செல்ஸியஸ் ஆகும். இமாலய மலைத்தொடரில் இருந்து குளிர் காற்று வீசுவதால் இங்கு  ஜனவரி மாதம் குளிர் மிகுந்து காணப்படும்.