மஷோப்ரா சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்து ரசிக்க விரும்பும் பயணிகள் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையான கோடைப்பருவத்தில் பயணம் மேற்கொள்வது சிறந்தது. இருப்பினும், இனிமையான சூழல் நிலவுவதுடன் குறைவான மழைப்பொழிவும் காணப்படுவதால் மழைக்காலமும் மஷோப்ரா சுற்றுலாவுக்கு உகந்ததாக உள்ளது.
(ஏப்ரல் முதல் ஜூன் வரை) : மஷோப்ரா சுற்றுலாத்தலத்தில் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை கோடைக்காலம் நீடிக்கிறது. இனிமையான சூழல் நிலவும் இக்காலத்தில் அதிகபட்சமாக 30°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 8°C வெப்பநிலையும் நிலவுகிறது. நாட்டின் மற்ற வெப்பப்பகுதிகளின் உஷ்ணத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்கள் கோடைக்காலத்தில் மஷோப்ராவுக்கு வருகை தருகின்றனர்.
( ஜூலை முதல் செப்டம்பர் வரை) : மஷோப்ரா சுற்றுலாத்தலத்தில் ஜூலை மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் மழைக்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் மிதமான மழைப்பொழிவை இப்பகுதி பெறுகிறது.
( அக்டோபர் முதல் ஜனவரி வரை) : மஷோப்ரா சுற்றுலாத்தலத்தில் அக்டோபர் மாதம் துவங்கும் குளிர்காலம் ஜனவரி வரை நீடிக்கிறது. இக்காலத்தில் குறைந்தபட்சமாக -10°C வெப்பநிலையும் அதிகபட்சமாக 10°C வெப்பநிலையும் மட்டுமே நிலவுகிறது. கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காணப்படுவதால் இக்காலத்தில் மஷோப்ராவுக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.