Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மோகோக்சங் » வானிலை

மோகோக்சங் வானிலை

மோகோக்சங்கிற்கு சுற்றுலா வருவதற்கு மிகவும் ஏற்ற பருவமாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் உள்ளன. இந்த பருவத்தில் மழைப்பொழிவுடன் சேர்ந்து இருக்கும் மகிழ்ச்சிகரமான பருவநிலையுடன் மோகோக்சங் நகரத்தை சுற்றிப் பார்க்க முடியும். மோகோக்சங்கில் புத்தாண்டு தினத்தை பழங்குடியினருடன் சேர்ந்து அவர்களுடைய வழியில் கொண்டாடுவது மிகவும் நினைவு கூறத்தக்க நிகழ்வாக இருக்கும்.

கோடைகாலம்

மோகோக்சங்கின் கோடைக்காலம் சற்றே மிதமானதாக இருக்கும். அஸ்ஸாமின் சமவெளிகளுடன் இணைந்திருக்கும் மோகோக்சங்கின் வெப்பநிலை மிகவும் கடுமையானதாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படும் போது, ஆச்சரிமூட்டும் விதமாக மிதமான வெப்பநிலையே நிலவுகிறது. கோடைக்காலத்தில் மோகோக்சங்கில் நிலவும் சராசரி வெப்பநிலையாக 27'C இருக்கும்.

மழைக்காலம்

வருடத்தின் பெரும்பாலான நாட்களில் மழைப்பொழிவு பெய்து கொண்டிருக்கும் மோகோக்சங்கில் மழைக்காலம் நீண்ட பருவமாகும். மோகோக்சங் வழக்கமாக வருடத்தின் மாதங்களில், ஒன்பது மாதங்கள் மழை பெய்து கொண்டே இருக்கும் இடமாகும். ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மிகவும் அதிகமான மழைப்பொழிவு ஏற்படும் மாதங்களாக உள்ளன. மோகோக்சங்கின் மழைப்பொழிவு 2500 மிமீ-ஆக உள்ளது.

குளிர்காலம்

மோகோக்சங்கில் மிகவும் குளிரான மாதங்களாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்கள் உள்ளன. இந்நாட்களில் வெப்பநிலை 2C க்கும் குறைவாக சென்று விடும். எனினும், இந்நாட்களில் நிலவும் சராசரி வெப்பநிலை 11'C முதல் 23'C வரையிலும் இருக்கும்.