அழகாக தோற்றமளிக்கும் நகராட்சி பூங்கா ஹேப்பி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. கம்பனி பாக் எனப்படும் இப்பகுதி முசூரியின் பூங்கா நல அமைப்பால் பராமரிக்கப்படுகிறது.
லைப்ரரி பாயிண்டில் இருந்து 3 கிமீ தொலைவில் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச நிர்வாக பள்ளிக்கு அருகில் இப்பூங்கா அமைந்துள்ளது. இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் வகையில் பல வகையான பூக்களும், பறவைகளும் இங்கு உள்ளன.
800 வகைகளுக்கும் மேலான பூக்கள் இருக்கும் தோட்டத்தில், பலவகைச் செடிகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன. பெடூனியா, டாலியாஸ், பான்சி, பெகோனியா ஆகிய புகழ்பெற்ற மலர்களும் இங்கு கிடைக்கின்றன. பெரிய சீன மரம் ஒன்றும் இத்தோட்டத்தில் அமைந்துள்ளது.
இங்கு அமைக்கப்பட்டிருக்கும் செயற்கை ஏரியில் பயணிகள் படகு சவாரி செய்து மகிழலாம். மேலும் நீரூற்றும், அழகிய விரிப்பைப் போன்ற பச்சைப் புல்வெளியும் இங்கு அமைந்துள்ளது. வாடகைக் கார்கள், ரிக்ஷாக்கள், சிறிய குதிரைகள் மற்றும் சைக்கிள் மூல பயணிகள் இவ்விடத்தை அடையலாம்.



Click it and Unblock the Notifications