Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாகூர் » வானிலை

நாகூர் வானிலை

நாகூர் தர்க்காவுக்கு விஜயம் செய்ய ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஏற்றவையாக உள்ளன. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களிலும் ஒரு குறுகிய சுற்றுலாப்பயணமாக நாகூருக்கு வரலாம். பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் நாகூருக்கு விஜயம் செய்ய உகந்தது.

கோடைகாலம்

நாகூர் நகரத்தில் மார்ச் மாதம் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கின்றது. இந்த உஷ்ணமான மாதங்களில்  சராசரியாக 28°C  முதல் 39°C வரை வெப்பநிலை காணப்படும்.  அதிக உஷ்ணமும் ஈரப்பதமும் நிலவும் இந்த கோடைக்காலத்தில் நாகூருக்கு பயணம் மேற்கொள்வதை பெரும்பாலான பயணிகள் தவிர்க்கின்றனர்.

மழைக்காலம்

ஜூன் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நாகூர் நகரத்தில்  மழைக்காலம் நீடிக்கிறது. இக்காலத்தில் மிதமான சூழல் நிலவுவதோடு சராசரியான மழைப்பொழிவையும் நாகூர் பெறுகிறது. மேலும் மலர்களும் பழங்களும் அதிக அளவில்  இந்த மழைக்காலத்தில் விற்கப்படுவது சுற்றுலாச்சூழலுக்கு மேலும் அழகூட்டுகிறது.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாத இறுதிவரை நாகூரில் குளிர்காலம் நிலவுகிறது. இக்காலத்தில் இப்பகுதியின் வெப்பநிலை குறைந்து இதமான சூழலுடன் காட்சியளிக்கிறது. குளிர்காலத்தில் சராசரியாக 21°C  முதல் 30°C வரை வெப்பநிலை காணப்படும்