Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நஹன் » ஈர்க்கும் இடங்கள் » சிம்பல்வாரா வனவிலங்கு சரணாலயம்

சிம்பல்வாரா வனவிலங்கு சரணாலயம், நஹன்

26

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நஹன் பகுதியில் அமைந்திருக்கும் சிம்பல்வாரா வனவிலங்கு சரணாலயம் தனித்தன்மை வாய்ந்த தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்ட இடமாகும்.

சால் வகை காடுகளை சுற்றிலும் கொண்டிருக்கும் இந்த சரணாலயம், உலகெங்கிலும் இடம் பெயரும் பறவைகளுக்கு ஏற்ற சரணாலயமாக இருக்கிறது. சிவாலிக் மலைத்தொடரின் கண்கவரும் இயற்கை காட்சிகளையுடைய இடமாக அறியப்படும் இந்த சரணாலயத்தில், பார்வையாளர்கள் நீரோடைகளும், பசுமையான கானகமும் சிலுவையைப் போன்று குறுக்கும் நெடுக்குமாக செல்வதை காண்பார்கள்.

இந்த சரணாலயத்தின் நடைபாதைகளில் ட்ரெக்கிங் செய்யும் வேளைகளில் சம்பார், சிட்டல் மற்றும் கோரல் ஆகிய காட்டு விலங்குளை ஆங்காங்கே காண முடியும். மேலும், குரைக்கும் மான், காட்டுப் பன்றிகள், சிறுத்தைப்புலி மற்றும் சிவந்த கழுத்துடைய காட்டுக்கோழிகளையும், பாட்ரிட்ஜ் வகை பறக்கும் விலங்கினங்களை காண்பதற்கான மிகச் சரியான இடமாகவும் சிம்பல்வாரா வனவிலங்கு சரணாலயம் உள்ளது.

ஹரியான மாநிலத்தின் கலேசார் வனவிலங்கு சரணாலயமும், இந்த இடத்திற்கு அருகில் இருப்பதால் காட்டு வாழ்க்கையை அனுபவிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகச் சிறந்த அனுபவங்களில் குறையொன்றும் இருக்காது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
02 Apr,Thu
Return On
03 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
02 Apr,Thu
Check Out
03 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
02 Apr,Thu
Return On
03 Apr,Fri