நால்தேஹ்ரா நகரத்திற்கு மிக அருகில் 60 கி.மீ தூரத்தில் ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து டெல்லி, சண்டிகர், மும்பை, ஸ்ரீநகர் போன்ற முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து பயணிகள் டாக்சிகள் மற்றும் கேப் வாகனங்கள் மூலம் நால்தேஹ்ரா நகருக்கு வரலாம். தவிர அருகில் உள்ள சர்வதேச விமானநிலையமாக டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.