Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! » ஈர்க்கும் இடங்கள் » ஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம்

ஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்!

23

ஆம்சாங் வனவிலங்குகள் சரணாலயம், இயற்கை அபிமானிகளுக்கு சிறப்பான விருந்தளிப்பதாகத் திகழ்கிறது. இங்கு, சில அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை காணலாம்.

பாலூட்டிகளான சீன எறும்புதின்னி, பறக்கும் நரி, மெதுவாகச் செல்லும் பாலுண்ணி வகை பிராணி, அஸ்ஸாமீஸ் குரங்கு, ரீசஸ் குரங்குகள், தொப்பித் தலை குரங்கு, ஹூலாக் குரங்கு, காட்டுப்பூனை, சிறுத்தை பூனை, சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி, சாம்பார் மான்கள், குரைக்கும் மான், காட்டெருது மற்றும் முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும், சிறிய நாரை, பெருநாரை, வெள்ளை பின்புறத்தை உடைய பருந்து, ஒல்லியான அலகுடைய பருந்து, காலீஜ் காட்டுக்கோழி, பச்சை இம்பீரியல் புறா மற்றும் பல வண்ணங்களாலான சிறிய ஹார்ன்பில் போன்ற பறவைகளும் இங்கு காணக்கிடைக்கின்றன.

இது மலைப்பாம்பு, ராட்சத பல்லி, இந்திய நாகப்பாம்பு போன்ற பல்வேறு வகை ஊர்ந்து செல்லும் விலங்கினங்களையும் நம் கண்களுக்கு விருந்தாக்குகின்றது.

குவாஹத்தி நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இந்த சரணாலயம், குவாஹத்தியின் எல்ஜிபிஐ விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், குவாஹத்தி இரயில் நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

குவாஹத்திக்கு அருகாமையில் அமைந்துள்ளதனால் இது அஸ்ஸாம் வரும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த சரணாலயத்திற்கு வருகை தர ஏற்ற காலம் அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டமே ஆகும்.

அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! படங்கள்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Apr,Tue
Check Out
22 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Apr,Tue
Return On
22 Apr,Wed

Near by City