Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! » ஈர்க்கும் இடங்கள் » கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயங்கள்

கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயங்கள், அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்!

23

கிழக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் வடக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம் ஆகியவையே கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன.

இவை இரண்டுமே கர்பி ஆங்லாங் மாவட்ட கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. புலி, யானை, காட்டெருது, சாம்பார் மான்கள், கரடிகள், குரைக்கும் மான்கள், ரீசஸ் குரங்குகள், ஹூலாக் குரங்குகள், காட்டுப்பன்றிகள், குறுரோமம் அடர்ந்த பூனைகள் போன்றவை இவ்விரு சரணாலயங்களில் வாழும் சில விலங்கினங்களாகும்.

கிழக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம் சுமார் 221.81 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த சரணாலயத்தில் பல்வேறு வகை வுட்லாண்ட் பறவைகள் மற்றும் மலைப்பாம்பு, நாகப்பாம்பு, ராட்சத பல்லிகள், மலை ஆமைகள் போன்ற விலங்கினங்களையும் காண முடிகிறது.

மாநிலத்தின் மிக நன்றாகப் பராமரிக்கப்படும் சரணாலயமாக விளங்கும் இச்சரணாலயத்துக்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் செல்வது சாலச்சிறந்ததாகும்.

சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அருகாமை விமான நிலையமான ஜோஹ்ராத் விமான நிலையத்தின் வாயிலாக, இது உலகின் பிற பகுதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

திமாப்பூர் விமான நிலையத்திலிருந்தும், குவாஹத்தியின் எல்ஜிபிஐ விமான நிலையத்திலிருந்தும் கூட இங்கு வரலாம்.

புவியியல் அமைப்பின் படி காசிரங்கா தேசியப் பூங்காவுக்கு தெற்குப்புறத்தில் அமைந்துள்ள வடக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம் காசிரங்கா தேசியப் பூங்காவில் வாழும் மிருகங்களுக்கு புகலிடமாக விளங்குகிறது. வருடாந்திர வெள்ளப்பெருக்கு சமயங்களில் இவ்விலங்குகள் இங்கு புலம்பெயர்ந்து வருகின்றன.

வடக்கு கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயம், ஜோர்ஹாத் விமான நிலையத்திலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவிலும், குவாஹத்தியின் எல்ஜிபிஐ விமான நிலையத்திலிருந்து சுமார் 220 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இச்சரணாலயம், கர்பி ஆங்லாங் மாவட்டத்தின் தலைமைச் செயலகமான திஃபூவிலிருந்து சுமார் 205 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

கர்பி ஆங்லாங் வனவிலங்குகள் சரணாலயங்களுக்கு வருகை தர ஏற்ற காலகட்டம் நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலகட்டமே ஆகும்.

அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! படங்கள்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu

Near by City