Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! » ஈர்க்கும் இடங்கள் » லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம்

லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம், அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்!

23

மேன்மை பொருந்திய பிரம்மபுத்ரா நதியின் கரையோரங்களில் அமைந்துள்ள லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம், லாவ்கோவா-புரச்சாபோரி சுற்றுச்சூழல் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்குகிறது.

இது அஸ்ஸாமின் நாகயோன் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயம், காண்டாமிருகங்கள் மற்றும் காட்டெருமைகளின் இயற்கையான வாழ்விடமாகத் திகழ்கிறது.

இவ்விரண்டு மிருகங்களுக்கும் அப்பாற்பட்டு, சுற்றுலாப் பயணிகள், சிறு மான்கள், புலி, சிறுத்தை பூனை, யானை, மீன்பிடி பூனை, புனுகு பூனை போன்ற இதர மிருகங்களையும் காணலாம்.

மேலும், இங்கு 225 -க்கும் மேற்பட்ட பறவை வகைகளும் காணப்படுகின்றன. இது சுமார் 39 வகை மீன்கள், 9 வகை நிலநீர்வாழ் உயிரினங்கள், 14 வகை ஊர்வன ஆகியவற்றின் இனப்பெருக்க மையமாகவும் செயலாற்றி வருகிறது.

லாவ்கோவா வனவிலங்குகள் சரணாலயத்திற்கு செல்ல ஏதுவான காலம் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலமேயாகும். சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாகயோன் நகரமே இச்சரணாலயத்திற்கு அருகாமையில் உள்ள நகரமாகும்.

நாகயோனின் மாவட்டத் தலைமைச் செயலகத்திலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குவாஹத்தி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் போக்குவரத்து சேவைகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் உள்ள தேசியப் பூங்காக்கள் மற்றும் விலங்குகள் சரணாலயங்கள்! படங்கள்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat

Near by City