நீமுச்சில் இருந்து 18 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது பத்வமாதா திருக்கோவில். சலவைக்கற்களால் கட்டப்பட்ட இத்திருக்கோவிலில் மஹாமய பத்வமாதா சிலை உள்ளது.
இந்தச் சிலையைச் சுற்றி ஒன்பது நவதுர்கைச் சிலைகள் அமைந்துள்ளன. பிரம்மி, மகேஷ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, நர்சின்ஹி, ஏந்த்ரி, சிவிதத்தி மற்றும் சாமுண்டா ஆகிய ஒன்பது நவதுர்கை சிலைகளைக் கொண்டுள்ளது இத்திருக்கோவில்.
சக்தியை பிரதானமாக கொண்ட கோவில்களில் பத்வமாத திருக்கோவிலுக்கு முக்கிய இடம் உண்டு. இக்கோவிலில் இருக்கும் பாவ்தி புனித நீரை ஆரோக்ய தீர்த்தம் என்று அழைக்கின்றனர்.
இந்தப் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால், அனைத்து விதமான தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் நீங்கும் என்பது நம்பிக்கை. இந்தத் திருக்கோவிலில் பத்வமாதா வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள் பாவிக்கிறார். தினமும் நடக்கும் பூஜை புணஸ்காரங்களைப் பார்க்க பக்தர்கள் பலர் வருகின்றனர்.



Click it and Unblock the Notifications