நீமுச் மாவட்டத்தில் உள்ள கோர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது நவ தோரான் திருக்கோவில். இந்த அழகிய திருக்கோவில், 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இரண்டு வரிசைகளில்,அழகிய அலங்கார வளைவுகளைக் கொண்டுள்ளது.
இந்த வளைவுகள் கோவிலின் மத்தியில் சந்திக்கின்றன. இரண்டு தூண்கள் கோவிலின் கூரையை தூக்கிப் பிடித்தவாறு நிற்கிறது. இக்கோவிலின் மிகப் பெரிய சிறப்பு அங்கிருக்கும் அழகிய வராஹர் சிலையாகும்.
இலை வடிவில் பதாககைகள், மாலையோடு நிற்பவர்கள், மகராஸ் தலை என கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோர் கிராமத்தில், விக்ரம் சிமெண்ட் கேம்பஸ் அருகில் நவ தோரான் திருக்கோவில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications