நீமுச் நகரில் இருந்து சுமார் 32 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது சுகாநந்த்ஜி ஆஸ்ரமம். இது ராஜஸ்தான் மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ளது. தொன்மையான குகை ஒன்றில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது இந்த ஆஸ்ரமம்.
சிவபெருமான் கோவிலும் இந்த ஆஸ்ரமத்துக்குள் இருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இந்த ஆஸ்ரமம் அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.
24000 ஸ்லோகன்களைக் கொண்ட பாரத் சம்ஹிதா என்னும் நூலை இயற்றியவர் வியாசதேவர் அல்லது வேதவியாசர். வேதவியாசரின் மகன் சுகா தான் இந்த ஆஸ்ரமத்தைத் தோற்றுவித்தவர்.
சுகாநந்த்ஜி ஆஸ்ரமத்தில், ஹர்யாலி அமாவாசை மற்றும் பைசக் பூர்ணிமா அன்று நடத்தப்படும் திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இத்திருவிழாவைக் கான பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.



Click it and Unblock the Notifications