Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை மக்களே உஷார்...மார்ச் 27, 29ல் இத்தனை புறநகர் ரயில்கள் ரத்து...எந்தெந்த ரயில்கள் தெரியுமா?

சென்னை மக்களே உஷார்...மார்ச் 27, 29ல் இத்தனை புறநகர் ரயில்கள் ரத்து...எந்தெந்த ரயில்கள் தெரியுமா?

சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் இடையிலான ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், மார்ச் 27 மற்றும் 29 தேதிகளில் மொத்தம் 19 மின்சார ரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொன்னேரி-கவரைப்பேட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மூர் மார்கெட்-கும்மிடிப்பூண்டி இடையேயான மின்சார ரயில் உள்ளிட்ட 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Railway platform

சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி- கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடைய மார்ச் 27 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில் பகல் 01.20 முதல் மாலை 05.20 வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக மொத்தம் 19 மின்சார ரயில்கள் (EMU, MEMU) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. இந்த மாற்றங்கள் சென்னை சென்ட்ரல் - சூலூர்‌ப்பேட்டை - நெல்லூர் வழித்தடத்தில் உள்ள ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரத்து செய்யப்படும் மின்சார ரயில்கள் - முழு பட்டியல் :

மூர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸ் (MMC) - சுலூர்‌ப்பேட்டை MEMU பயணிகள் ரயில்:​

  • காலை 5:40 மணி புறப்படும்.​
  • காலை 10:15 மணி புறப்படும்.​
  • மதியம் 12:10 மணி புறப்படும்.​
  • மூர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸ் - கும்மிடிப்பூண்டி EMU உள்ளூர் ரயில்:​
  • காலை 10:30 மணி புறப்படும்.​
  • காலை 11:35 மணி புறப்படும்.​
  • மதியம் 1:40 மணி புறப்படும்.​

சென்னை பீச் - கும்மிடிப்பூண்டி EMU உள்ளூர் ரயில்:​

  • மதியம் 12:40 மணி புறப்படும்.​
  • மதியம் 2:40 மணி புறப்படும்.​
  • சுலூர்‌ப்பேட்டை - நெல்லூர் MEMU பயணிகள் ரயில்:​
  • காலை 8:10 மணி புறப்படும்.​
  • சுலூர்‌ப்பேட்டை - மூர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸ் EMU உள்ளூர் ரயில்:​
  • மதியம் 12:35 மணி புறப்படும்.​
  • மதியம் 1:15 மணி புறப்படும்.​
  • பிற்பகல் 3:10 மணி புறப்படும்.​

ஆவடி - மூர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸ் MEMU பயணிகள் உள்ளூர் ரயில்:​

  • அதிகாலை 4:25 மணி புறப்படும்.​
  • கும்மிடிப்பூண்டி - மூர் மார்க்கெட் காம்ப்ளெக்ஸ் EMU உள்ளூர் ரயில்:​
  • மதியம் 1:00 மணி புறப்படும்.​
  • பிற்பகல் 3:45 மணி புறப்படும்.​
  • கும்மிடிப்பூண்டி - சென்னை பீச் EMU உள்ளூர் ரயில்:​
  • மதியம் 2:30 மணி புறப்படும்.​
  • பிற்பகல் 3:15 மணி புறப்படும்.​
  • பிற்பகல் 4:30 மணி புறப்படும்.​
  • நெல்லூர் - சுலூர்‌ப்பேட்டை MEMU பயணிகள் ரயில்:​
  • காலை 10:20 மணி புறப்படும்.

பகுதி நேரமாக ரத்து செய்யப்படும் ரயில்கள் :

செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி EMU உள்ளூர் ரயில் - சென்னை பீச் முதல் கும்மிப்பூண்டி வரை ரத்து செய்யப்படும்.

கும்மிடிப்பூண்டி - தாம்பரம் EMU உள்ளூர் ரயில் - கும்மிடிப்பூண்டி முதல் சென்னை பீச் வரை ரத்து.

ரத்தாகும் பேசன்ஜர் ஸ்பெஷல் ரயில்கள் :

  • மூர் மார்கெட் - பொன்னேரி
  • மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ்- மீஞ்சூர்
  • சென்னை பீச் - எண்ணூர்
  • சென்னை பீச் - பொன்னேரி
  • பொன்னேரி - மூர் மார்கெட் காம்ப்ளக்ஸ்
  • மீஞ்சூர் - மூர் மார்கெட் காம்ப்ளக்ஸ்

பயணிகள் என்ன செய்யலாம்?

- மாற்று போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தலாம்.
- பேருந்துகள், தனியார் பயண சேவைகள் மூலம் மாற்று பயண திட்டம் அமைக்கலாம்.
- அடுத்ததாக இயக்கப்படும் ரயில்களை முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
- ரயில்வே அதிகாரப்பூர்வ தகவல்களை கவனிக்கவும்
- IRCTC இணையதளம் மற்றும் சென்னை ரயில்வே நிலைய அதிகாரிகள் வழங்கும் தகவல்களை தொடர்ந்து பாருங்கள்.
- எந்தவொரு சேவைகள் மாற்றப்பட்டாலும் உடனடியாக அறிவிக்கப்படும்.
- முன்கூட்டியே பயண திட்டங்களை மாற்றிக் கொள்ளுங்கள்
- வேலைக்கு செல்லும் பயணிகள் மற்றும் பயணத் திட்டங்கள் அமைத்திருக்கும் நபர்கள், மாற்று வழிகளை தேர்வு செய்யலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+