Search
  • Follow NativePlanet
Share
» » உலகின் மிகவும் சவாலான ஸ்னோமேன் ரேஸ் – கலந்துக் கொள்ள விருப்பமா உங்களுக்கு?

உலகின் மிகவும் சவாலான ஸ்னோமேன் ரேஸ் – கலந்துக் கொள்ள விருப்பமா உங்களுக்கு?

உலகின் மிகவும் சவாலான அல்ட்ரா மராத்தான்களில் ஒன்றாகக் கருதப்படும் ஸ்னோமேன் பந்தயத்தை நடத்த பூட்டான் தயாராக உள்ளது. அழகிய பனி மூடிய சிகரங்களும், வெள்ளி போன்று மின்னுகின்ற ஆறுகளும், பூத்துக் குலுங்கும் வனாந்திரமும், மடாலயங்கலும் பல தரப்பட்ட சுற்றுலாப் பயணிகளை பூட்டான் நோக்கி ஈர்க்கிறது.

அனைத்து அழகும் ஒரு புறம் இருக்க, பூட்டானில் சாகச விரும்பிகளுக்கும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. பாராகிளைடிங், ரிவர் ஃராப்டிங், பஞ்சி ஜம்பிங் உடன் இப்போது மிகவும் சவாலான ஸ்னோமேன் பந்தயமும் இப்போது சேர்ந்து உள்ளது.

snowmanrace1

ஆம்! இந்த சவாலான போட்டி அக்டோபர் 13 முதல் அக்டோபர் 17 வரையிலான தேதிகளில் நடைபெறும். இந்த போட்டியில் அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர், தான்சானியா, சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்களும், பூட்டானைச் சேர்ந்த ஒன்பது வீரர்களும் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூட்டானில் உள்ள மிகவும் சவாலான மலையேற்றப் பாதையான ஸ்னோமேன் டிரெயில், தொலைதூர லுனானா பகுதி, உலகின் மிக உயரமான ஏறாத மலையான கங்கர் புயென்சத்தின் அடிவாரம் ஆகியவற்றை வீரர்கள் கடந்து செல்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்தப் பந்தயம் நடத்தப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக பூட்டானிடம் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. அது தான், அதிகரித்து வரும் காலநிலை மாற்றம், அதை கருத்தில் கொண்டு பூட்டான் மன்னர் எடுத்து முன்முயற்சியே இந்த ஸ்னோமேன் பந்தயம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு புவி வெப்பமடைதலின் வெளிப்படையான விளைவுகளை, குறிப்பாக உயரமான இமயமலை போன்ற நிலப்பரப்புகளை எடுத்துக்காட்டுகிறது.

ஆக்சிஜன் இல்லாத சராசரியான 14,800 அடியில் பயணிப்பதால் விளையாட்டு வீரர்கள் ஐந்து நாட்களில் போட்டியிட்டு 203 கிலோமீட்டர் தூரத்தை கடப்பார்கள். ஒரு சிலரால் மட்டுமே முடிக்கப்பட்ட இந்த பாதையை முடிக்க பொதுவாக 20 முதல் 25 நாட்கள் ஆகும். அறிக்கைகள் கூறுகின்றன. இந்த பாதையில் மிக உயர்ந்த புள்ளி 17,946 அடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இதில் சுற்றுலா நோக்கமும் அடங்கியுள்ளது. ஸ்னோமேன் ரேஸ் செயலகத்தின் சார்பாக பூட்டானின் சுற்றுலா கவுன்சில் அறிவித்துள்ள ரேஸ், காணக்கூடிய நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதனைக் காண சுற்றுலாப் பயணிகள் தாரளாமாக இங்கு வரலாம், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூட்டானில் நடக்கவிருக்கும் ஸ்னோமேன் பந்தயத்தின் விவரங்களை இப்போது நீங்கள் அறிந்து கொண்டீர்கள், உங்களது உற்சாகம் கூடிவிட்டதா? இப்போதே பூட்டான் செல்ல முந்திக் கொள்ளுங்கள்!

More News

    Read more about: himalayas trekking race
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+