சென்னை மாநகரம் மற்றும் தமிழக முழுக்க மகளிர் இலவசமாக அரசு பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்பது நம் அனைவரும் அறிந்த விஷயம். தற்போது 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் சென்னை மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் டிசம்பர் 21 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்!
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்
தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு இலவசமாக பேருந்து பயண திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 6 மாதம் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்கான டோக்கன் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னையைச் சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி-2025 முதல் ஜூன்-2025 வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய பயனாளிக்கு வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதத்திற்கு இலவச பயணம்
சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு வரும் ஜனவரி முதல் ஜூன் வரை பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்துக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை வழங்கப்படும். அடையாறு, எம்கேபி நகர், பாடியநல்லூர், குன்றத்தூர், அயனாவரம், வடபழனி உள்ளிட்ட மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை, பேருந்து நிலையம் என 42 இடங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் பணிமனை அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் டோக்கன் வழங்கப்படும்.
இலவச பஸ் பாஸுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
சென்னையில் உள்ள பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை திட்டத்தை வழங்குகிறது, இதனால் அவர்கள் MTC பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம்.
தகுதி அளவுகோல்கள்:
· வயது: 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்.
· வசிப்பிடம்: சென்னை நகர எல்லைக்குள் வசிக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
· முகவரி சான்று: ரேஷன் கார்டு.
· வயதுச் சான்று: ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை அல்லது கல்விச் சான்றிதழ்கள்.
· புகைப்படங்கள்: இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள்.
விண்ணப்ப சமர்பிப்பு:
· விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் சென்னையில் உள்ள 40 நியமிக்கப்பட்ட MTC டிப்போக்கள் அல்லது டெர்மினிகளில் சமர்ப்பிக்கவும்.

ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு
மேலும், ஏற்கனவே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று, தற்போது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது அடையாள அட்டையுடன், தங்களின் தற்போதைய பாஸ்போர்ட் சைஸ் அளவிலான ஒரு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் விசாரணைகளுக்கு, நீங்கள் MTC இன் வாடிக்கையாளர் சேவையை +91-9445030516 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications



