Search
  • Follow NativePlanet
Share
» »பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் உலக அளவில் 2 ஆம் இடம் பிடித்த இந்தியா – காரணம்?

பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில் உலக அளவில் 2 ஆம் இடம் பிடித்த இந்தியா – காரணம்?

ஏழு கண்டங்கள் கொண்ட இந்த பரந்த உலகில் ஆசிய கண்டமே மிகப்பெரியது. அழகிய பெரிய மற்றும் சிறிய நாடுகளால் சூழப்பட்டுள்ள இந்த கண்டத்தின் பெரும்பான்மையான நாடுகள் சுற்றுலாவையே பிரதான பொருளாதாரமாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் "தி ஸ்விஃப்டெஸ்ட்" என்ற ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள "டிராவல் சேப்டி இன்டெக்ஸ்" உலக அளவில் பேச்சுப் பொருளாக மாறி இருக்கிறது. காரணம் என்னவென்றால் இந்த பட்டியலில் பெரும்பாலான ஆசியா நாடுகள் இடம் பிடித்திருக்கின்றன. துரதிர்ஷ்டமான ஆச்சர்யம் என்னவென்றால் இந்தியா இந்த பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்து இருக்கிறது. என்ன காரணம் என்று கீழே பாருங்கள்!

முதலிடத்தில் ஆசியா

முதலிடத்தில் ஆசியா

ஆசியா பல அழகான நாடுகளின் தாயகமாகும், அவை ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளால் ஆராயப்படுகின்றன. மாபெரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பெற்று நாடுகள் பெருமையடைந்து இருந்தாலும், பாதுகாப்புக் கவலைகள் வரும்போது ஆசியாவை சார்ந்த பல நாடுகள் மிகவும் ஆபத்தான நாடுகளாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தி ஸ்விஃப்டைஸ்ட் என்ற நிறுவனத்தின் டிராவல் சேப்டி இன்டெக்ஸ்

தி ஸ்விஃப்டைஸ்ட் என்ற நிறுவனத்தின் டிராவல் சேப்டி இன்டெக்ஸ்

ஸ்விஃப்டெஸ்ட் என்பது ஒரு காப்பீட்டு இணையதளம் உலகளவில் அதிகம் பயணித்த 50 நாடுகளின் பயண பாதுகாப்பு குறியீட்டை வெளியிட்டுள்ளது. இந்த 50 நாடுகளைக் கருத்தில் கொண்டு, 2022 இல் பயணம் செய்த பாதுகாப்பான மற்றும் ஆபத்தான நாடுகளைத் தீர்மானிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நாடுகளின் தரவரிசையைத் தீர்மானிக்க, தி ஸ்விஃப்டைஸ்ட் 7 காரணிகளில் கவனம் செலுத்தியது. அதன் அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுதப்பட்டன.

தி ஸ்விஃப்டைஸ்ட் தேர்ந்தெடுத்த 7 காரணிகள்

தி ஸ்விஃப்டைஸ்ட் தேர்ந்தெடுத்த 7 காரணிகள்

கொலையால் ஏற்படும் மரணங்கள், சாலை போக்குவரத்து இறப்புகள், விஷ மரணங்கள், மோசமான சுகாதார நிலைமைகளால் மரணம், தொற்று நோய் காரணமாக ஏற்படும் மரணங்கள், காயம் காரணமாக ஏற்படும் மரணம் மற்றும் இயற்கை பேரிடர் ஆபத்து ஆகிய 7 காரணிகளையும், 100,000 குடியிருப்பாளர்களின் முடிவுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பில்லாத முதல் 10 நாடுகள்

1. தென்னாப்பிரிக்கா - அதிக கொலைகள், மிக மோசமான சுகாதார இறப்பு விகிதம், தொற்று நோய்கள் மற்றும் காயம் காரணமாக இறப்பு விகிதம் என தென்னாப்பிரிக்கா முதல் இடம் பிடித்துள்ளது.

2. இந்தியா - மோசமான சுகாதாரச் சூழல்களால் ஏற்படும் இறப்புகளில் இந்தியா உலக அளவில் முதல் இடம் பிடித்துள்ளது, மீத காரணிகளில் சற்று குறைவாக இருந்ததால் இந்தியா 2 ஆம் இடம் பிடித்துள்ளது.

3. டொமினிகன் குடியரசு - டொமினிகன் குடியரசு அதிக சாலை போக்குவரத்து இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு சாலை மரணம் நடைபெருகிறதாம்.

4. மெக்சிகோ - 100,000க்கு 29.1 கொலைகள் என்ற விகிதத்தில் மெக்சிகோவில் இரண்டாவது மிக அதிகமான கொலைவெறி இறப்பு விகிதம் உள்ளது. மேலும், இந்த நாடு இயற்கை பேரழிவுகளின் நான்காவது மிக அபாயத்தைக் கொண்டுள்ளது.

5. பிரேசில் - அதிக கொலையால் ஏற்படும் மரணம், தொற்று நோய் மற்றும் காயம் காரணமாக ஏற்பாடு உயிரிழப்பினால் பிரேசில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

6. கம்போடியா - தொற்று நோய்கள் மற்றும் மோசமான சுகாதாரம் காரணமாக ஏற்படும் இறப்புகளால் கம்போடியா ஆறாம் இடத்தில் உள்ளது.

7. பிலிப்பைன்ஸ் - அனைத்து நாடுகளையும் விட பிலிப்பைன்ஸில் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் மரணம் அதிகம் உள்ளது.

8. சவுதி அரேபியா - சாலை போக்குவரத்து இறப்பு விகிதத்தில் இரண்டாவது இடத்திலும், காயத்தால் ஏற்படும் மரணத்தில் சவுதி அரேபியா 8 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

9. வியட்நாம் - சாலை போக்குவரத்து இறப்பு விகிதம் மற்றும் தொற்று நோய்களால் ஏற்படும் மரணத்தினால் வியட்நாம் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

10. இந்தோனேசியா - மோசமான சுகாதாரம், திக இயற்கை பேரழிவு ஆபத்து ஆகியவை இந்தோனேசியாவில் அதிகம் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற முதல் 25 நாடுகளில் 12 நாடுகள் ஆசியாவைச் சேர்ந்தவை என்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும். அதிலும் இந்தியா 2 ஆம் இடத்தை பிடித்திருப்பது மிகவும் மோசமான செய்தியாகும்!

More News

    Read more about: travel safety measures
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+