Search
  • Follow NativePlanet
Share
» »இனி ரயிலில் Unreserved டிக்கெட் வச்சே ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்யலாம்...எப்படி தெரியுமா?

இனி ரயிலில் Unreserved டிக்கெட் வச்சே ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்யலாம்...எப்படி தெரியுமா?

ஏப்ரல் 5, 2025 அன்று வெளியான தகவலின்படி, இனி ரயிலில் முன்பதிவு செய்யாத டிக்கெட் இருந்தாலே போதும், SLEEPER கோச்சில் பயணிக்கலாம். ரயில்வேயின் இந்த புதிய வசதி மூலம், முன்பதிவு செய்யாமல் கூட SLEEPER பெட்டியில் பயணிக்க முடியும். இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம். இப்படி Unreserved டிக்கெட் வைத்து, ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்வதற்கு ஒரு எளிமையான டிரிக் தெரிந்தாலே போதும்.

Railway station

இந்திய ரயில்வேயில் Unreserved, reserved தவிர, De reserved என்ற மூன்றாவதாக ஒரு முறை உள்ளது. இது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. இந்த முறையை பயன்படுத்தி தான் Unreserved டிக்கெட் வைத்துக் கொண்டே ஸ்லீப்பரில் பயணம் செய்ய முடியும்.

இந்திய ரயில்வேயில் "De Reserved" டிக்கெட் என்றால் என்ன?

இது, ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு முன்பதிவு செய்யாமல் SLEEPER வகுப்பு பெட்டியில் பயணம் செய்வதற்கான டிக்கெட் ஆகும். இதன் மூலம், குறைந்த தூரம் பயணம் செய்பவர்கள், இருக்கை முன்பதிவு செய்யாமல் பயணிக்கலாம். இந்த டிக்கெட்டின் முக்கிய நோக்கம் என்னவென்றால், முழு பயணத்திற்கும் SLEEPER டிக்கெட் தேவையில்லை. ஆனால் SLEEPER வகுப்பில் பயணிக்க விரும்பும் குறுகிய தூர பயணிகளுக்காக இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, கொஞ்ச தூரம் மட்டும் SLEEPER வகுப்பில் போகணும்னு நினைக்கிறவங்களுக்காக இது.

இது எப்படி வேலை செய்யும்?

முன்பதிவு செய்த டிக்கெட் வைத்திருப்பவர்கள், முழு பயணத்திற்கும் முன்பதிவு செய்யப்படாத SLEEPER பெட்டிகளில் பயணிக்கலாம். அவர்கள் எவ்வளவு தூரம் போறாங்களோ, அதுக்கு மட்டும் பணம் கட்டினா போதும். இதற்கான செலவு, முன்பதிவு செய்த SLEEPER டிக்கெட்டை விட, இந்த டிக்கெட் விலை குறைவு. ஏன்னா, இது குறைந்தபட்ச கட்டண தூரத்தை விட, உண்மையான பயண தூரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, தூரத்துக்கு ஏத்த மாதிரி காசு மாறும்.

இந்த டிக்கெட்டை எப்படி வாங்குவது?

சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களும் இந்த பெட்டிகளில் பயணிக்கலாம். ஆனா, இந்த De Reserved டிக்கெட்டுகள் எல்லா ரயில்களிலும் கிடைக்காது. சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் தான் இருக்கும். எந்த ரயிலில் இருக்குனு தெரிஞ்சுக்கனும். உதாரணமாக, நாடு முழுவதும் 35 ரயில்களில் இந்த வசதி இருக்கு. தமிழ்நாட்டை உள்ளடக்கிய தென்னக ரயில்வேயில் 19 ரயில்களில் இந்த வசதி இருக்கு. இந்த ரயில்களில் மட்டும்தான் De Reserved டிக்கெட்டை பயன்படுத்தி பயணிக்க முடியும்.

டிக்கெட்டை எப்படி பெறுவது?

தட்கல் டிக்கெட் வாங்குற மாதிரி, பயணத்துக்கு முன்னாடி நாள் வாங்க முடியாது. ரயில் புறப்படுவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பு, ரயிலில் காலியாக இருக்கும் சீட்டை பொறுத்துதான் இந்த டிக்கெட் கிடைக்கும். அதாவது, கடைசி நேரத்தில் தான் இது கிடைக்கும். "முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைக் கொண்ட பயணிகள், முழு பயணத்திற்கும் முன்பதிவு செய்யப்படாத நியமிக்கப்பட்ட SLEEPER வகுப்பு பெட்டிகளில் பயணிக்கலாம், அவர்கள் பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே பணம் செலுத்தலாம்" என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆகவே, இனி ரயிலில் SLEEPER கோச்சில் போகணும்னு ஆசைப்பட்டால், இந்த De Reserved டிக்கெட்டை பயன்படுத்தி பாருங்க. ஆனா, ரயில் புறப்படுறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தான் டிக்கெட் கிடைக்கும்னு ஞாபகம் வெச்சுக்கோங்க. எல்லா ரயில்களிலும் இந்த வசதி இருக்காது. குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் தான் இருக்கும்.

More News

    Read more about: indian railways irctc
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+