Search
  • Follow NativePlanet
Share
» »மும்பை - திருவனந்தபுரம் இடையே கோடை சிறப்பு ரயில் ஏப்ரல் 3 முதல் மே 31 வரை இயக்கம்

மும்பை - திருவனந்தபுரம் இடையே கோடை சிறப்பு ரயில் ஏப்ரல் 3 முதல் மே 31 வரை இயக்கம்

கோடை காலம் இந்த ஆண்டு முன்கூட்டியே துவங்கி உள்ளதால் கோடை விடுமுறைக்காக சுற்றுலா செல்பவர்கள், கோடை விடுமுறைக்கான குளுமையான பகுதிகளுக்கு செல்பவர்களின் வசதிக்காக இந்திய ரயில்வே கூடுதல் ரயில்களை அறிவித்து வருகிறது. கோடை சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதால் கூட்டல் நெரிசல் தவிர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மும்பை-திருவனந்தபுரம் இடையே கோடை சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீங்களும் சம்மர் லீவுக்காக கேரளா, மும்பை செல்கிறீர்கள் என்றால் நிச்சயம் இது உங்களுக்கு உதவும்.

Chhatrapati Shivaji Maharaj Terminus

இந்திய ரயில்வே கோடைக் காலத்தின் போது அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் மற்றும் திருவனந்தபுரம் கோச்சுவேலி இடையே சிறப்பு கோடை ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ரயில் சேவையின் முக்கிய விவரங்கள் :

ரயில் எண்:01063 (LTT - KCVL), 01064 (KCVL - LTT)
இயக்கத் தொடக்க தேதி: ஏப்ரல் 3, 2024
இயக்கத் நிறைவு தேதி: மே 31, 2024
மும்பையில் இருந்து புறப்படும் நாள்:ஒவ்வொரு வியாழக்கிழமை
திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் நாள்: ஒவ்வொரு சனிக்கிழமை

பயண நேரம் மற்றும் நிற்கும் நிலையங்கள்

மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் (LTT)- திருவனந்தபுரம் கோச்சுவேலி
- புறப்படும் நேரம்: மாலை 4:00
- கோச்சுவேலியை அடையும் நேரம்: மறுநாள் இரவு 10:45

திருவனந்தபுரம் கோச்சுவேலி (KCVL) - மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் (LTT)
- புறப்படும் நேரம்: மாலை 4:20
- மும்பையை அடையும் நேரம்: திங்கள் அதிகாலை 12:45

இந்த ரயில் மும்பை, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள முக்கிய இடங்களில் நிற்கும்.

முக்கிய நிறுத்தங்கள்:

- மகாராஷ்டிரா தானே, பன்வேல், ரோஹா, சிப்லூன், சங்கமேஷ்வர், ரத்னாகிரி, சிந்துதுர்க்
- கோவா திவிம், கர்மாளி, மட்காவ்
-கர்நாடகா கார்வார், கோகர்ண ரோடு, உடுப்பி, முருதேஷ்வர், மங்களூர்
- கேரளா கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், ஆலப்புழா, திருவனந்தபுரம்

ரயிலின் வசதிகள்

- பயணிகளுக்கு விரும்பிய வகை வண்டிகளை தேர்வு செய்யும் வசதி உள்ளது.
- AC First Class, AC 2-Tier, AC 3-Tier, Sleeper Class மற்றும் General Coaches ஆகியவை உள்ளன.
- உணவு மற்றும் தண்ணீர் வசதிகள் இருக்கின்றன.

முன்பதிவுக்கு தகவல்

- இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு மார்ச் 24, 2024 முதல் தொடங்கியது
- IRCTC இணையதளத்தில் ([www.irctc.co.in](https://www.irctc.co.in)) அல்லது அருகிலுள்ள ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்யலாம்.

கோடைக்காலத்தில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் இருப்பதை கருத்தில் கொண்டு, முன்பதிவு மேற்கொள்வது மிக அவசியம். இந்த கோடை சிறப்பு ரயில் மூலம் கோடைக்கால விடுமுறையை மகிழ்வாக அனுபவிக்க பயணிகள் முன்பதிவு செய்து பயனடையலாம்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+