• Follow NativePlanet
Share
» »சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 15 அன்று தாமதமாக புறப்படும் ரயில்கள் - தெற்கு ரயில்வே சமீபத்திய அட்டவணை!

சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 15 அன்று தாமதமாக புறப்படும் ரயில்கள் - தெற்கு ரயில்வே சமீபத்திய அட்டவணை!

தற்போது நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் மற்றும் பிற செயல்பாட்டு சரிசெய்தல் காரணமாக ரயில் சேவைகளில் பல மாற்றங்களை தெற்கு ரயில்வே சமீப காலமாக அறிவித்து வருகிறது. நவம்பர் 15, வெள்ளிக்கிழமை சென்னை MGR சென்ட்ரல் மற்றும் தமிழகத்தின் பிற முக்கிய இடங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு கூறுகிறது!

Southern railway latest announcement

பேரிங் ரேக் தாமதமாக ஓடுவதால் ஏற்படும் தாமதம்

ஒரு ரயில் சேவையானது அதன் "பேரிங் ரேக்" தாமதமாக ஓடுவதால், அதன் முந்தைய பயணத்தில் ரயில் செட் அல்லது ரேக் தாமதமானது என்று அர்த்தம். அதாவது, ரயில் சேவைக்காக அசெம்பிள் செய்யப்பட்ட பெட்டிகள் மற்றும் என்ஜின்களின் தொடர் சரியான நேரத்தில் இலக்கை அடையாததால், அதன் அடுத்த திட்டமிடப்பட்ட புறப்பாட்டிற்கு சரியான நேரத்தில் தயார் செய்யவோ, சுத்தம் செய்யவோ, சேவை செய்யவோ முடியவில்லை என்பதினால் அடுத்ததாக புறப்படும் ரயில் சேவைகளின் நேரம் மாற்றியமைக்கப்படுகிறது.

சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள்

இந்த தாமதமானது, ரயில் ரேக்கை அதன் அடுத்த பயணத்திற்குத் திருப்புவதற்கான நேரத்தை அனுமதிக்கும் வகையில், சேவைகளை மீண்டும் திட்டமிடுவதற்கு அல்லது ரத்து செய்வதற்கும் வழிவகுக்கிறது. ரயில்வே தனது இணையதளம், SMS அறிவிப்புகள் மற்றும் நிலைய அறிவிப்புகள் மூலம் பயணிகளை முன்கூட்டியே பயணிகளுக்கு அறிவித்து வருகிறது. அந்த வகையில் நவம்பர் 15, வெள்ளிக்கிழமை அன்று தமிழகத்தின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் சென்னை MGR சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

இன்றைய நாளில் (நவம்பர் 15) தாமதமாக புறப்படும் ரயில்கள்

1. ரயில் எண் 12842, சென்னை MGR சென்ட்ரலில் இருந்து கொல்கத்தா செல்லும் சென்னை சென்ட்ரல்-ஷாலிமார் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நவம்பர் 15 காலை 7:00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 4 மணி நேரம் 30 நிமிடங்கள் தாமதமாக இன்று காலை 11:30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2. ரயில் எண் 12656, சென்னை MGR சென்ட்ரலில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் செல்லும் MGR சென்னை சென்ட்ரல்-அகமதாபாத் நவஜீவன் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 10:10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 2 மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக, அதாவது இன்று மதியம் 12:30 மணியளவில் புறப்பட்டு செல்லும்.

3. ரயில் எண் 12969, கோயம்புத்தூரில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் செல்லும் கோவை-ஜெய்ப்பூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் இன்று காலை 9.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 6 மணி நேரம் 50 நிமிடங்கள் தாமதமாக, கோவையில் இருந்து இன்று மாலை 4:15 மணி அளவில் புறப்பட்டு செல்லும்.

4. ரயில் எண் 12522, எர்ணாகுளத்தில் இருந்து பீகார் செல்லும், எர்னாகுளம்-பருணி ராப்டிசாகர் எக்ஸ்பிரஸ் இன்று காலை 10:50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 12 மணி நேரம் 25 நிமிடங்கள் தாமதமாக, இன்று இரவு 11:15 மணி அளவில் புறப்பட்டு செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகள் இந்த அறிவிப்புக்கு ஏற்றவாறு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+